பெண்கள் பிறப்பிலேயே துணிச்சலானவர்கள் என்பதை நிரூபிக்க இதைவிட வேறென்ன வேண்டும் ..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 456
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  756
  Shares

​பைக்கில் வந்த திருடர்களை தாக்கிய துணிச்சலான இளம்பெண்!
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ராவல்பிண்டி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பட்டப்பகலில் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த திருடர்களை அடித்து விரட்டிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது மேலும் இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.ராவில்பிண்டி பகுதியில் உள்ள சாலையில் இளம்பெண் ஒருவர் நடந்துசென்று கொண்டிருக்கும்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு திருடர்கள் அப்பெண்ணின் கைப்பையை திருட முயன்றனர். அப்பொழுது அந்த பெண் கைப்பையை விடாமல் பிடித்ததால், திருடர்கள் இருவரும் வண்டியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர். 

கீழே விழுந்ததில், ஒரு திருடன் தப்பியோடிவிட்டான். எனினும், அச்சமயத்தை பயன்படுத்திக்கொண்ட அந்த இளம்பெண், மற்றொரு திருடனை துணிவுடன் தாக்கினார்.
சிசிடிவி கேமராவில் பதிவாகிய இச்சம்பவம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருடர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அப்பெண்ணின் துணிச்சலான செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் சிசிடிவியில் பதிவான அந்த காட்சிகளில் இருக்கும் பெண்ணும், அந்த கொள்ளையர்களும் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவம், பெண்கள் பிறப்பிலேயே துணிவானவர்கள் என்பதை நிரூபிக்கின்றது. 


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 456
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  756
  Shares