மனைவி மற்றும் மகளை யாழ் வைத்தியசாலியில் விட்டுவிட்டு தப்பியோடிய கணவனால் பரபரப்பு ..! மக்கள் பயத்தில் கதவுகளை மூடிக்கொண்ட அவலம்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 436
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  736
  Shares

யாழ் வடமராட்சி வைத்தியசாலையில் பரபரப்பு! மனைவி மகள் வைத்தியசாலையில்!! குடும்பத்தலைவர் ஓட்டம்…வடமராட்சி மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பத்தலைவர் அங்கிருந்து திடீரென வெளியேறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.குடும்பத்தலைவர் விலங்கு விசர் நோய்த் தொற்றுக்குள்ளாகி அவருடைய மனைவி மற்றும் மகளைக் கடித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் வரும் நிலையில் குடும்பத்தலைவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட முன்னரே வெளியேறிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

வடமராட்சி, அல்வாயைச் சேர்ந்த குடும்பத்தலைவரை ஒருவருக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்துள்ளது. அவர் உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளவில்லை.
இதனால் குடும்பத்தலைவரின் நடவடிக்கைகளில் கடந்த சில நாள்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் தனது மனைவி மற்றும் மகளுக்கு கடித்துள்ளார்.
அதனையடுத்து குடும்பத்தலைவரும் அவருடைய மனைவி மற்றும் மகளும் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மூவருக்கும் விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றுவதற்கு வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் குடும்பத்தலைவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் மந்திகை வைத்தியசாலை மற்றும் அல்வாய் பகுதியில் இன்று பரபரப்பு ஏற்பட்டது. சிலர் தமது வீட்டு வாசல் படலைகளை பூட்டுப் போட்டு மூடியிருந்தனர். குடும்பத்தலைவரை இன்று மாலை வரையில் கண்டுகொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
BiggBoss 21-08-2017 Episode | சுஜாவின்...
டெங்குவில் இருந்து எப்படி தப்பிப்பது?
நடிகை நமீதா காதலனுடன்.இணையத்தை கலக்கும...
அழகான மணப்பெண்ணாக நமீதா. ! திருமண போட...
விஜய் ஒரு நாள் மட்டும் நடித்து முடியாத...
அமெரிக்கா ஜனாதிபதியின் மகளுக்கு நடிகை ...
இந்த 15 பொருட்களை தானமாக கொடுத்தால் கட...
பொலிஸாரால் கைது செய்யப் பட்ட ராஜா ராணி...
திருமண நாளில் தனித்தனியாக ஓட்டம் பிடித...
அமலா பாலுக்கு பாலியல் தொல்லை ..! தொழில...
தமிழனின் சவாலை ஏற்ற பாலிவூட் பிரபலங்கள...
இதை உண்ணும் குழந்தைகளுக்கு உயிர் ஆபத்த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 436
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  736
  Shares