இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 557
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    857
    Shares

இன்றைய  பஞ்சாங்கம்
24-01-2018, தை 11, புதன்கிழமை, சப்தமிதிதி மாலை 04.17 வரை பின்பு வளர்பிறைஅஷ்டமி. ரேவதி நட்சத்திரம் காலை 08.34 வரை பின்பு அசுவினி. நாள் முழுவதும்மரணயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. ரத சப்தமி. சூரிய வழிபாடு நல்லது. கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எமகண்டம் காலை 07.30-09.00, குளிகன்பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள்காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00
1/24/2018
இன்றைய ராசிபலன்
“மேஷம்”
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். அசுவனி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
“ரிஷபம்”
ரிஷபம்: திட்டமிட்ட வேலைகளை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்
“மிதுனம்”
மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
“கடகம்”
கடகம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதித்துக் காட்டும் நாள்.
“சிம்மம்”
சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
“கன்னி”
கன்னி: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர்களை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலை கழிக்கப்படுவீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.
“துலாம்”
துலாம்: மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
“விருச்சிகம்”
விருச்சிகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.
“தனுசு”
தனுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். கனவு நனவாகும் நாள்.
“மகரம்”
மகரம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப்போகும். திடீர் பயணங்கள் உண்டு. எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
“கும்பம்”
கும்பம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள்.
“மீனம்”
மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

இதையும் படிக்கலாமே
ஸ்பைடர் படமும் உண்மை நிகழ்வும்
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
பிரபல நடிகர் மீது பிரமாண்ட இயக்குனர் ச...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
அம்மாவை போல மாற ஆபரேஷன் செய்யும் பிரபல...
உன் ஓட்டை வாயை திறக்காமல் மூடிக்கொண்டு...
அதிகமாக பகிருங்கள்: மண்புழு ப்ரை, வெட்...
கரும்பு ஜூஸ் இத்தனை நோய்களை தீர்க்கிறத...
இறந்தவர்கள் வந்து அழைப்பது போன்று கனவு...
இன்றைய நாளும் இன்றைய பலனும் .!
1000ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மனுக்கு ஆ...
குட்டிக் குழந்தையாய் நாம் பார்த்த சூர்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 557
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    857
    Shares