வீட்டில் தொல்லை கொடுக்கும் கரப்பான்பூச்சி மற்றும் கொசு இரண்டையும் ஒழிக்க இதோ உடனடி தீர்வு ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares

வீட்டில் கொசு மற்றும் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமா இருக்கா? அதிலிருந்து விடுபட ஓர் எளிய வழி!
பெரும்பாலானோரில் வீட்டில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒன்று தான் கரப்பான் பூச்சி. இது வீட்டின் சமையலறை, குளியலறையில் தான் அதிகம் குடிக்கொண்டிருக்கும். இதற்கு அடுத்தப்படியாக நம் தூக்கத்தைக் கெடுக்க வருவது தான் கொசு. இந்த இரண்டும் ஒரு வீட்டில் அதிகம் இருந்தால், அவ்வீட்டில் இருக்கவே முடியாது.
இவ்விரண்டுமே ஒன்றிற்கு ஒன்று போட்டிப் போட்டு நம்மை தொல்லை செய்ய வருபவைகளாகும். இவைகளை ஒழித்துக்கட்ட ஓர் அற்புத வழி உள்ளது. சரி, இப்போது அந்த வழி என்னவென்று காண்போம்.
“நேச்சுரல் ஸ்ப்ரே”
கொசுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகளை அழிப்பதற்கு கடைகளில் கெமிக்கல் கலந்த ஸ்ப்ரேக்கள் விற்கப்படலாம். ஆனால் அவற்றில் உள்ள கெமிக்கல் தெரிந்தோ தெரியாமலோ நம் உடலினுள் சென்றுவிட்டால், அதனால் பேராபத்தை சந்திக்க நேரிடும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை இந்த தொல்லைகளை அழிக்கும் ஒரு நேச்சுரல் ஸ்ப்ரேவைக் கொடுத்துள்ளது.
தேவையான பொருட்கள்:
ஷாம்பு – 1/2 கப்
வினிகர் – 1/2 கப்
வெஜிடேபிள் ஆயில் – 1/2 கப்
“தயாரிக்கும் முறை:”
முதலில் ஸ்ப்ரே பாட்டிலில் அனைத்து பொருட்களையும் ஊற்றி நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். இப்போது கொசுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகளை அழிக்கும் நேச்சுரல் ஸ்ப்ரே தயார்.
“பயன்படுத்தும் முறை:”
இந்த நேச்சுரல் ஸ்ப்ரேவை கொசுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வரும் இடத்தில் தெளித்துவிட்டால், அப்பூச்சிகள் வருவது தடுக்கப்படும். மேலும் இந்த கலவையை கை, கால்களில் கூட தடவிக் கொள்ளலாம். இதனால் கொசுக்கள் நம்மை அண்டாது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
ஜூலிக்கு பாலியல் தொல்லை.? சூட்டிங் தளத...
உப்பு போட்டுத் தான் சாப்பிடுகிறீர்கள் ...
புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று தெ...
2 பிள்ளைகளின் தாயான தன் மனைவியை வேறு ஒ...
மோசடி செய்த கணவனுக்காக போலீஸாருடன் தகர...
பட்டப் பகலில் இளம் மனைவியை அலுவலகம் பு...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடக...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ற்கு பிரபல ...
பூட்டிய வீட்டிலிருந்து 2 நாட்களாக கதறி...
இந்தியா மற்றும் சில நாடுகளில் சக்தி வா...
இலங்கை அகதி ஒருவர் சுவிட்சர்லாந்தில் அ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares