காதலித்து திருமணம் செய்ததால் துடிக்க துடிக்க அடித்துக் கொலை ..! வேடிக்கை பார்த்த மக்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 468
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

பீகாரில் காதலித்து திருமணம் செய்ததால் தங்கையின் கணவரை அவரது சகோதரர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் Dhanbad-ஐ சேர்ந்தவர் வித்யாசாகர் ராஜ்வன்ஷி, இவர் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்ற போது, ரீனா குமாரி என்ற பெண்ணைச் சந்தித்தார். நட்பாக பழகிய இவர்கள், பின்னர் காதலர்களாகினர்.
இவர்களின் காதலுக்கு ரீனா குமாரியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், வித்யாசாகரின் வீட்டார் எந்த பிரச்சனையும் செய்யவில்லை.
இதனைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர், ஜார்கண்ட்டில் உள்ள Dhanbad நகரில் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் வித்யாசாகர் தனது காதல் மனைவியுடன், தனது சகோதரியைப் பார்க்க பீகாரில் உள்ள ஹர்டியாவுக்கு, ஜனவரி 18ஆம் திகதி வந்துள்ளார்.
இதனை அறிந்த மீனா குமாரியின் சகோதரர்கள், இரண்டு நண்பர்களுடன் வந்து வித்யாசாகரை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர், தனது கணவரை காப்பாற்றுமாறு மீனா குமாரி கதறியுள்ளார்.
ஆனால், ஒருவரும் வித்யாசாகரைக் காப்பாற்ற முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து, தனது மாமியாரை அழைத்து வர வீட்டிற்கு ஓடியுள்ளார் மீனாகுமாரி.
அவர் திரும்பி வந்து பார்த்த போது, படுகாயமடைந்த வித்யாசாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தார்.
இதனைத் தொடர்ந்து தனது சகோதரர்களின் மீது ராஜோளி காவல்நிலையத்தில் மீனா குமாரி புகார் அளித்த நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 468
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares