49 பெண்களை கொன்று பன்றிகளுக்கு உணவாக கொடுத்த கொடூரன்..! பொலிஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 531
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  831
  Shares

கனடாவைச் சேர்ந்த ஒருவர் 49 பெண்களைக் கொடூரமாகக் கொன்று அவர்களின் சடலத்தைப் பன்றிகளுக்கு உணவாகப் போட்டுள்ளதோடு, காவல் துறையினருக்கு மனித மாமிசத்தை விற்றுள்ளது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் கனடாவில் அதிகளவில் கொலை செய்தவர்கள் குறித்து வெளியிடப்பட்ட ஆவணப் படம் ஒன்றில் அந்நாட்டைச் சேர்ந்த ஒருவர் 49 பெண்களைக் கொடூரமாக கொன்று அவர்களின் சடலத்தை பன்றிகளுக்கு உணவாகப் போட்டுள்ளதோடு, காவல் துறையினருக்கு மனித மாமிசத்தை விற்றுள்ளது தெரியவந்துள்ளது.

கனடாவைச் சேர்ந்த 68 வயதுடைய ராபர்ட் பிக்டோன் என்பவருக்கு வான்கூவரில் பன்றி பண்ணை சொந்தமாக உள்ளது. அங்கு அமைதியான வாழ்க்கை வாழ்வது போன்று பயங்கரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.பாலியல் தொழிலாளர்கள் மற்றும் போதை மருந்து விற்பவர்கள் மூலம் பெண்களைத் தனது பண்ணைக்கு ராபர்ட் அழைத்து வருவார். அவர்களுக்கு பணம், மது போன்றவற்றை கொடுப்பதாக ஆசைகாட்டி பெண்களை கொடுமைப்படுத்தி இவர் கொலை செய்வார். இப்படி 49 பெண்களை அவர் கொலை செய்துள்ளார். பின்னர் அவர்களின் சடலத்தை பண்ணையில் இருக்கும் பன்றிகளுக்கு உணவாகவும், பின்னர் அந்த மனித மாமிசத்தைக் காவல் துறையினருக்கு விற்றும் வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2002இல் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வீட்டில் வைத்திருப்பதாக ராபர்ட் மீது புகார் கூறப்பட்ட நிலையில் அங்கு அதிகாரிகள் சோதனை செய்தபோது, கொலை செய்யப்பட்ட பெண்களின் பொருள்களும், உடல் பாகங்களும் கிடைத்தன. அதோடு இரண்டு பெண்களைக் கொலை செய்து அவர்களின் தலை, கை, கால்களைக் குளிரூட்டும் பெட்டியில் ராபர்ட் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ராபர்ட் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கூறுகையில், 49 என்பது ராபர்டின் கணக்கில் பாதி என அதிர்ச்சி தகவலைக் கூறினார்கள்.
2001இல் பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்த எலைன் ஆலன் என்பவர், 62 பெண்களைக் காணவில்லை என அப்போது புகார் அளித்திருந்தார். அதில் காணாமல்போன பெண்களில் 34 பேரை தற்போது வரை காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையெல்லாம் வைத்து ராபர்ட்டின் கொலை எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என வழக்கறிஞர்கள் கூறினார்கள்.
கசாப்பு கடைக்காரன் என அழைக்கப்படும் ராபர்ட் இன்று வரை கனடாவின் மோசமான தொடர் கொலைகள் செய்த நபர் என்ற பெயருக்கு சொந்தக்காரராக உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
லண்டனில் 12 பேர் கொண்ட கும்பல் கொலைவெற...
அனுமதியில்லாமலே நீங்கள் இருக்கும் இடத்...
கோழியுடன் உடலுறவு கொண்ட இளைஞன் .அடச்சி...
விக்னேஷ் சிவனுக்கு கீர்த்தி சுரேஷ் இப்...
எயிட்ஸ் நோய் குணமாக கன்னிப் பெண்ணுடன் ...
உயரத்திலும் அழகிலும் நடிகர் விஜய் யை ம...
பந்து வீச ஓடி வரும் போது மயக்கம் போட்ட...
காதலித்து திருமணம் செய்த பெண்ணை கண்டுக...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
திருமணமாகி 30 நிமிடத்தில் நடந்த கொடூர ...
இலங்கையில் பிரபாகரனின் தலை தொங்கியுள்ள...
நடிப்பில் கால் பதித்து கலக்கும் சூர்ய...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 531
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  831
  Shares