பள்ளி குழந்தைகளின் குடிநீரில் விஷம் கலந்த கொடூரன்..! அதிர்ச்சியில் ஆசிரியர்களும் பெற்றோரும் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 481
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  781
  Shares

தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகள் குடிக்கவிருந்த குடிநீரில் விஷம் கலந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தின் வேதாரன்யத்தில் உள்ள ஊராட்சி பள்ளி ஒன்றில் சுமார் 40 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
தலைமையாசிரியராக வடிவேல் என்பவரும் ஆசிரியையாக கலாவதி என்பவரும் பணிபுரிந்து வரும் அந்த பள்ளியில், மாணவர்களின் குடிநீர் தேவைக்காக ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த துப்புரவுப் பணியாளர் நாகம்மாள், பணிகளை முடித்துவிட்டு குடிநீர் அருந்த தண்ணீர்க் குழாயைத் திறந்துள்ளார்.
நீரின் நிறம் வெண்மையாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நாகம்மாள், சந்தேகம் அடைந்து தொட்டிக்கு அருகே சென்று பார்த்தபோது எலிகளைக் கொல்ல பயன்படுத்தும் மருந்து பாக்கெட்டுகள் கிடந்திருக்கின்றன.
அதற்குள் அப்பகுதி மக்களுக்கு தகவல் பரவிய நிலையில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளைக் கொல்ல விஷம் வைத்தவன் யார்? என்று கொந்தளித்த தலைமை ஆசிரியர் இது தொடர்பாக பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
பொலிசார், துலிப் என்ற மோப்பநாய் உதவியுடன் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆனால் அருகில் உள்ள மளிகைக் கடை வரை ஓடிய மோப்ப நாய், அத்துடன் படுத்துவிட்டது.
மேலும் சுகாதாரத்துறை சார்பாக விஷம்கலந்த நீரை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ள நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே
பிக்பாஸ் டைட்டில் யாருக்கு?
என்னப்பா ஓவியா இப்டி பேசுறாங்க
கற்றுக் கொள் ஜூலி இது தான் ஓவியாவின் ந...
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?
நடிகை தமன்னாவுக்கு பாலியல் தொல்லை!
தயாரிப்பாளர் தற்கொலைக்கு காரணமான அன்பு...
ஆவா குழு தலைவனை காப்பாற்றும் சுவிஸ் வா...
விபச்சார வழக்கில் கைதான 70திற்கு மேற்ப...
உயிர்ப் பிச்சை கேட்ட பெண்களை ஈட்டியால்...
திருமணமான இரண்டு கிழமையில் நடிகை பிரிவ...
அம்மாடீயோ ...இந்த நடிகைகளுக்கு பாலியல்...
மூன்று பேரை துடிக்க துடிக்க கொலை செய்த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 481
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  781
  Shares