மூன்று வயது குழந்தையை கொன்று தந்தை தற்கொலை முயற்சி …! மனைவி செய்த அதிர்ச்சி செயல் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 477
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  777
  Shares

சென்னை: குடும்பத் தகராறில் மனைவி செருப்பால் அடித்ததால், 3 வயது குழந்தையை கொன்று கணவன் மதுவில் விஷயம் கலந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  திருப்போரூர் அருகே கரும்பாக்கம் அடுத்த பூஇலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (38). இவரது மனைவி காந்திமதி (32). இவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களது மகன் மதிஇனியன் (3). கடந்த சில மாதங்களாக கமலக்கண்ணனுக்கு போதிய வருவாய் கிடைக்காததால், குடும்பம் நடத்துவதற்கு பெரிதும் சிரமப்பட்டு வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி வாய்த்தகராறு மற்றும் அடிதடி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களை கமலக்கண்ணனின் தாய் சகுந்தலா சமாதானப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை மீண்டும் இவர்களுக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காந்திமதி, தனது கணவர் மற்றும் மாமியார் சகுந்தலாவை செருப்பால் அடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில், மனவேதனையடைந்த கமலக்கண்ணன், தனது 3 வயது மகன் மதிஇனியனை பைக்கில் ஏற்றிக்கொண்டு வீட்டை விட்டு வெளி சென்றார். மாலை 6 மணியாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களை உறவினர்களும், கிராமத்தினரும் பல இடங்களில் தேடினர். ஆனாலும், அவர்களை பற்றி எந்த தகவலும் இல்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அக்கிராமத்தில் இருந்து சுமார் ஒரு கிமீ தொலைவில் உள்ள தரைக்கிணறு அருகே ஒரு பைக் நின்றிருந்தது. அதன் அருகே கமலக்கண்ணன் மயங்கி கிடந்தார். அங்கு, ஒரு பூச்சிமருந்து மற்றும் காலியான மதுபாட்டில் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து பதறிபோய் ஓடி வந்த உறவினர்கள், குழந்தை மதிஇனியனை தேடினர். அப்போது, தரைகிணற்றுக்குள் குழந்தை பிணமாக மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தை கிணற்றிலிருந்து மீட்டனர். கமலக்கண்ணனை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குழந்தை மதிஇனியனின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப பிரச்னை மற்றும் மனைவி செருப்பால் அடித்ததால் மனமுடைந்து தனது 3 வயது குழந்தையை கிணற்றில் வீசி கொன்று, கமலக்கண்ணன் மதுவில் விஷம் கலந்த தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுவதால், அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். 

அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
பிக்பாஸ் வெற்றிக்கு என்ன வேண்டும்
பிரான்ஸில் அரசியல் ஆலோசகராக ஈழத்து சிற...
அதிர்ச்சியூட்டும் ஆபத்து, நமக்குத் தெர...
செக்ஸ் காமெடியில் நடிக்க ஆசைப்பட்ட நம்...
மாதவிடாய் நாட்களில் வெளியேறும் உதிரத்த...
பணம் தராவிட்டால் அம்மாவிற்கு பாலியல் த...
பிரபல மாடல் அழகி திடீர் மரணம் ..! உடல்...
காதலியின் வீட்டிற்கு வந்த காதலன் காதலி...
அதிகமாக பகிருங்கள்: இரவில் நன்றாக தூக்...
நடனமாடிக் கொண்டிருந்த பிரபல நடிகையின் ...
வீட்டில் தொல்லை கொடுக்கும் கரப்பான்பூ...
ஜேர்மனி வாழ் மக்களுக்கு ஆபத்து எச்சரி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 477
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  777
  Shares