பாதாள அறையில் இடுப்பளவு நீரில் சிவன்..! நீங்கள் அறிந்திராத அதிசய தகவல்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares

பாதாள அறையில் இடுப்பளவு நீரில் சிவனின் லிங்கம் – நீங்கள் அறிந்திராத அதிசய தகவல்கள்..!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி மாவட்டத்திற்கு அருகில் ஹம்பி என்னும் ஊர் உள்ளது.
இந்த ஊரில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்கள் உள்ளது. ஆனால் ராஜாவால் கட்டப்படாமல் ஒரு ஏழை பெண்ணால் கட்டப்பட்ட ஒரு வியத்தகு சிவ லிங்கத்தை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க…
ஒரு ஏழை பெண் தன்னுடைய வருமானத்தை கொண்டும்., பிறரிடம் யாசகம் வாங்கியும் கட்டியுள்ள அந்த லிங்கம் “படவி லிங்கம்” என்றழைக்கப்படுகிறது.
படவி என்றால் ஏழை பெண் என்று பொருள். ஒரே சிறிய நுழைவு வாயிலை கொண்ட பாதாள அறைக்குள் இந்த லிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.பார்ப்பதற்கு பிரமாண்டமாக காட்சி தரும் இந்த லிங்கம் இருக்கும் பாதாள அறைக்குள் ஒரு கால்வாய் ஓடிக்கொண்டே இருக்கிறது.
எப்போதும் தண்ணீரிலேயே இருக்கும் இந்த லிங்கத்திற்கு பூஜை செய்வது அவ்வளவு சாதாரணமான காரியம் இல்லை.இடுப்பளவு உள்ள தண்ணீரில் நடந்து சென்று பின் லிங்கத்தை பிடித்து அதன் மீது ஏறியே பூஜை செய்ய முடியும்.கங்கை நதியானது சிவனின் கட்டுப்பாட்டில் உள்ளதை உணர்த்தவே லிங்கத்தின் கீழே இங்கு எப்போதும் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

ஹம்பியில் எத்தனையோ சிவலிங்கங்கள் இருந்தாலும் இதுவே மிகப்பெரிய சிவலிங்கமாக உள்ளது.சுமார் மூன்று மீட்டர் உயரம் கொண்ட அந்த லிங்கத்தின் மீது எப்போதும் சூரிய ஒளி படும்படி அந்த இடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லிங்கம் உள்ள கால்வாயில் தண்ணீர் எப்போதும் செல்வதால் பக்தர்கள் அனைவரும் வெளியில் இருந்தே லிங்கத்தின் மீதும் பூக்களை தூவி வழிபடுகின்றனர்.-
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
YouTube Adhagappattathu Magajanangalay...
சுஜாவும் VS கணேஷும்
Bigg Boss நிகழ்ச்சியில் அரசியல் பேசும்...
கமலஹாசன் மூலம் தமிழகத்தை அழிக்கப் போகு...
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பலத்த மழை ...
நடிகை சமந்தாவா இப்படிச் செய்தார்?
ஐரோப்பாவில் வாழும் ஈழத் தமிழருக்கு கிட...
நடிகை சமந்தாவின் புகைப்படம் வெளியாகி ப...
சாமியாரை உருட்டு கட்டையால் புரட்டி எடு...
பேஸ் புக் பாவித்த படியே ஆபாச படம் பார்...
151 வருடங்களுக்கு பிறகு பூமியில் 3 நில...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares