பிணமாக மிதந்த இளம் பெண்ணும் இரண்டு குழந்தைகளும்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 659
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  959
  Shares

நாகர்கோவிலில்நித்திரவிளை அருகே தாய் மற்றும் 2 பிள்ளைகள் ஆற்றில் பிணமாக மிதந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலின்மேல்மிடாலம் பகுதியைச் சேர்ந்தவர் மார்ட்டின், இவரின்மகள் பேபி ஷாலினி, மருமகன் விஜயதாசன்.
மீனவரான விஜயதாசன், ஆழ்கடலில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த தம்பதிக்கு சஞ்சய்(7), பியுபோபர்(5) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.
பேபிஷாலினி, விஜயதாசனுக்கு இடையே 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சமாதானம் ஆகி, தங்களது பிள்ளைகளுடன்காஞ்சாம்புரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
இந்நிலையில், விஜயதாசன் சில நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றுவிட்டார். அதன் பின்னர், பேபிஷாலினியின் தந்தை மார்ட்டின் தனது மகளுக்கு தொலைபேசி அழைப்பைவிடுத்துள்ளார்.
பேபிஷாலினி அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த மார்ட்டின், காஞ்சாம்புரத்திற்கு வந்துள்ளார்.
அப்போது தான், தனது மகள் மற்றும் பேரன்கள் ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன்பே மாயமாகியது அவருக்கு தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நித்திரவிளைபொலிசில் மார்ட்டின் புகார் அளித்தார். அப்போது, கணபதியான்கடவு பகுதியில்உள்ள ஆற்றில் தனது மகளும், 2 பேரப் பிள்ளைகளும் பிணமாக மிதந்ததுதெரிய வந்தது.
இதனையடுத்துசம்பவ இடத்திற்கு பொலிசாருடன் சென்ற மார்ட்டின், ஆற்றில் மிதந்தது தனது மகள் தான் என்பதை உறுதி செய்தார்.
மேலும், பேபி ஷாலினியின் பிணத்தை மீட்டபோது, அவரின் முகம் பிளாஸ்டிக் பையால் மூடப்பட்டு இருந்தது. ஆனால், கை மற்றும் கால்கள் கட்டப்படவில்லை.
பிள்ளைகளின் உடலிலும் எந்த தடயங்களும் இல்லாதது பொலிசாருக்குசந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
அது பிணம்கிடந்த பகுதியில் இருந்து மோப்பம் பிடித்தபடிசிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால், நாய் ஓடிய வழியில்ஒரு Clinic மற்றும்பேபி ஷாலினியின்வீடும் இருந்தது.
அதன் பின்னர், பேபிஷாலினியின் கைப்பேசியை பொலிசார் சோதித்தபோது, அதில் ஒரு மருத்துவர் மற்றும்இரண்டு பேருடன் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவர் உட்பட மூவரையும் பொலிசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆழ்கடலுக்கு சென்ற விஜயதாசனுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பேபி ஷாலினியின் உடல் பிரேத பரிசோதனைக்குஅனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள்வந்த பின்னரே, ஷாலினியின் மரணத்திற்கான காரணம்தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

Bigg Boss இல் எதற்காக ஆர்த்தி & ஜு...
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவ...
T rajendar Clarifies why he scolded Dh...
இதை அரசியலாக்க வேண்டாம் ஏ ஆர் ரஹ்மானின...
ஆண்களே உஷார்! ஆண்களைத் தாக்கும் Top 8 ...
கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சும் ஜூலி....
100 நடிகைகளின் முன் சுய இன்பம் அனுபவித...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
ஆற்றில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து...
துடிக்க துடிக்க பெண்ணின் தலையில் கல்லை...
சற்றுமுன் தன் அரசியல் பயணத்தை தொடங்கிய...
அருள்,திருப்பாச்சி, பகவதி,தூள், போன்ற ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 659
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  959
  Shares