பிரபல நடிகை கழுத்தறுத்து கொலை..! காருக்குள் சடலம் மீட்பு..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 510
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  810
  Shares

காருக்குள் கொடூரமாக கிடந்த நடிகையின் சடலம்: திகைக்க வைத்த சம்பவத்தின் பின்னணி என்ன?
அமெரிக்காவின் பிரபல நடிகை சாரா ஸ்கோல் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் பிரபல நடிகைமற்றும் மொடலாக வலம் வந்தவர்சாரா ஸ்கோல்( 28).
தனது ஒற்றை மகனுடன் ஓரிகன் மாகாணத்தின் அலோகாவில் வசித்து வந்த சாரா, கடந்த வியாழன் அன்று பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அலோகாவின் சாலை ஒன்றில் நின்று கொண்டிருந்த BMW சொகுசு காரில், கொடூரமாககழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இரண்டு பெட்டிகளில் அடைக்கப்பட்டு சாராவின் உடல் கிடைத்துள்ளது.
மிகவும் பண்பானவர், அடக்கமான பெண் என அனைவராலும் குறிப்பிடப்படும் சாராவின் கொடூர கொலைக்குபின்னால் இருப்பவர் யார் என பொலிசார் நடத்திய துரிதமான விசாரணையில் நபர் ஒருவர் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
அந்த மர்ம நபரை சுற்றி வளைத்து கைது செய்துள்ள பொலிசார், நபர் குறித்த தகவலை தற்போது வெளியிட மறுத்துவிட்டனர்.
மேலும் கைது செய்த தருணத்தில் அந்த நபர் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் சந்தேகம் தீவரமடைந்துள்ளதாக தெரிகிறது.
சாராவின் இந்த கொடூர கொலை குறித்து யாருக்கேனும் தகவல் தெரியவந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி பொலிசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 510
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  810
  Shares