உலக பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீடு ..! 10 க்குள் நம்ம நாடும் இருக்கு .! எத்தனையாவது இடம் நீங்களே பாருங்க ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 435
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

உலகபணக்கார நாடுகள்ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட்வெல்த் ஆய்வு (New World Westyle) நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவில் பணக்கார நாடுகளின் பட்டியலில்அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்க பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 64,584 பில்லியன் டாலர் ஆகும். அதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது.
அந்நாட்டின் பணக்காரர்கள் 24,803 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து வைத்திருப்பதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து 19,522 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துடன்ஜப்பான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
பிரிட்டன் 9,919 பில்லியன் டாலர்களுடன் 4-வது இடத்திலும், ஜெர்மனி 9,660 பில்லியன் டாலர்களுடன் 5-வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில்இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின்தனி நபர்களிடம் உள்ள மொத்த சொத்து மதிப்பு 8,230 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. 2017-ம் ஆண்டு, இந்தியாவின் சொத்து மதிப்பு 25 சதவிகிதம்வளர்ச்சிக் கண்டுள்ளது.
2016-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 6,584 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஒரே ஆண்டில் 8,230 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவுக்கு அடுத்த இடத்தை பிரான்ஸ் பிடித்துள்ளது. அந்நாட்டின் சொத்து மதிப்பு 6,649 பில்லியன் டாலர்கள். அடுத்தடுத்த இடங்களை கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
இந்தியாவின்67 சதவிகிதசொத்துக்கள் ஒரு சதவிகிதஇந்தியர்கள் வசமே உள்ளது என முன்னர் நடத்தப்பட்டஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. அதையே இந்த ஆய்வும் கூறியிருக்கின்றது.
2007-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 3,165 பில்லியன் டாலர்களாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பணக்காரர்களின் சொத்து 160 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
– Maalai Malar
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

தூக்கம் தொலைத்த இரவுகள் !!!
சினேகன் ஹரிஷ் இருவரும் கமல் எதிரிலே கே...
ஜூலி மறந்தாலும் ரக்சனுக்கு நான் இருக்க...
மகிழ்ச்சியும் மன அமைதியும் தரும் சபரிம...
"புகைப்படம் எடுக்க வேண்டாம்"...
உங்களைசுற்றி தீய சக்திகள் இருக்கின்றதா...
எனக்கு இவரை பிடித்திருக்கிறது " அ...
வில்லன் நடிகருக்கு கட்டிப்பிடிக்க கற்ற...
27 வயது மனைவியை கொடூரமாக கொலை செய்த கண...
நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிய நான்...
முகபுத்தகத்தில் கல்லூரி இளைஞனுக்கு கா...
லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 435
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares