பால் மா (tea powder) ல் தொற்று நோய்க்கிருமிகள் ..! அவதானம் அதிகமாய் பகிருங்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares

Lactalis என்னும் பிரான்சு நாட்டு பால் பொருட்கள்தயாரிக்கும் நிறுவனத்தின் தயாரிப்புகளில் தொற்று நோய்க்கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளாகவே தனது நிறுவனத் தயாரிப்புகள் சிலவற்றில் நோய்க்கிருமிகள் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த வருடம் salmonella கிருமி நோய்த்தொற்று வெடித்துக் கிளம்பியதையடுத்து பல மில்லியன் பால் பவுடர் பெட்டிகளை அந்நிறுவனம் திரும்பப் பெற்றுக்கொள்ள முன்வந்துள்ளது.
இதே salmonella கிருமிதான் 2005 ஆம் ஆண்டு ஏற்பட்டநோய்த்தொற்றிற்கும் காரணமாக இருந்தது.
இப்போது பிரச்சினைக்கு காரணமாக உள்ள வட மேற்குபிரான்சில் அமைந்துள்ள அதே Craon தொழிற்சாலைதான் 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட நோய்த்தொற்றிற்கும் காரணமாக இருந்தது.
பாலைஉலர்த்தும் அமைப்புகளிலொன்றில் ஏற்பட்டநோய்த்தொற்றே பிரச்சினைக்கு காரணமாக அமைந்ததால், Lactalisக்கு சொந்தமான அந்த தொழிற்சாலை மூடப்பட்டது.
எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள்?
2005ஆம் ஆண்டு ஏற்பட்ட நோய்த்தொற்றினால் 146 குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதில் குறைந்தது 38 குழந்தைகளின் பிரச்சினைக்கு Lactalis பால்தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
பாரீஸிலுள்ளPasteur Institute, Craon தொழிற்சாலை மூடப்படும்வரையில் அங்கு salmonella கிருமிகள் இருந்ததாகக் கூறியுள்ளது.
இதன் விளைவாக 2005க்கும் 2006க்கும் இடையில்25 குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக அது கூறியது.
Lactalis நிறுவனம் சந்திக்கவுள்ள பிரச்சினைகள்
இந்தப்பிரச்சினையால் Lactalis நிறுவனத்திற்குபல நூறு மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்படும்.
பாதிக்கப்பட்டபல குழந்தைகளின்பெற்றோர் Lactalis நிறுவனத்தின்மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
ஐரோப்பா கண்டம், ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும்ஆப்பிரிக்கா ஆகியவற்றிலுள்ள நாடுகளுக்கு அனுப்பப்பட்ட சுமார் 12 மில்லியன் பால் பவுடர் பெட்டிகள் திரும்பப் பெறப்படவுள்ளன. பிரித்தானியாவும் அமெரிக்காவும் பாதிக்கப்படவில்லை.
Lactalisஇன்ஆண்டு வருமானம் 17 பில்லியன் யூரோக்கள் ஆகும். 47 நாடுகளில் தயாரிப்பு தொழிற்சாலைகளைக்கொண்ட இந்நிறுவனத்தின் பிரான்சு கிளைகளில் மட்டும் 15000பேர் வேலை செய்கிறார்கள்.
நோய்க்கிருமியால் ஏற்படும் பாதிப்புகள்
இந்த salmonella கிருமியால் நோய்த்தொற்று ஏற்பட்டால் diarrhoea, வயிற்றுப்பிடிப்பு, வாந்தி மற்றும்பயங்கர நீரிழப்பு ஏற்படும். குழந்தைகளுக்கு உயிரிழப்பும் ஏற்படலாம்.
பால் தரும் விலங்குகளிடமிருந்து பரவும் இந்த நோய்க்கிருமியால் ஏற்படும் நோய் குழந்தைகளுக்கும் மிகவும் வயதான முதியவர்களுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தக்கூடியது.
அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்
பிரான்சு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதே நேரத்தில் Craon தயாரிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.
நிறுவனத்திற்குஅபராதங்கள் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் பால் பவுடரை இன்னும்பல முக்கியமான சூப்பர்மார்க்கெட்டுகள் தொடர்ந்து விற்பனைசெய்து வருவது தெரியவந்துள்ளதால், வியாபாரிகள்மீது தடைகள் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
பிக் பாஸ் போட்டியின் வெற்றியாளர் ! ஓவி...
போதைக்கு அடிமையான பெண். பக்கத்து வீட்ட...
ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுகள் பிடித்த 2...
மகிழ்ச்சியும் மன அமைதியும் தரும் சபரிம...
கோட் பாதர் ,ஸ்கெட்ச்,பிரபல நடிகை மரணம்...
கொடுமை தாங்க முடியாது 20 வயது பெண் மரண...
நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொள்ளச் செ...
உயிர் காத்த தமிழனுக்கு நன்றி சொல்ல வந்...
2 பெண் உறுப்புக்கள் கொண்ட பிரபல தமிழ் ...
ஐந்து வயது சிறுவனை அடைத்து வைத்து தாய்...
மாதவிடாய் காலத்தில் இந்த 8 விடயங்களை ச...
லண்டனில் பாரிய தீ விபத்து ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares