ஆள் கடத்தி பொலீஸாரிடம் வசமாக மாட்டிக் கொண்ட தமிழ் நடிகர் ..! மனைவிக்காக செய்தாராம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 440
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  740
  Shares

தனது மனைவியின் வேலை பறிபோனதற்காக பழிவாங்க நினைத்து பள்ளி தாளாளரைக் கடத்திய சினிமா துணை நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் செந்தில்குமார் என்பவர் பள்ளி ஒன்றை நடத்தி வருவதோடு, அதன் தாளாளராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில்கடந்த 19ஆம் திகதி, செந்தில்குமார் நடைபயிற்சி மேற்கொண்டபோது, காரில் வந்த மர்மகும்பல் ஒன்று அவரை கடத்தியுள்ளது.
தொடர்ந்து செந்தில்குமாரின் அண்ணணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 3 கோடி ரூபாய் பணம் வேண்டும் என மிரட்டியுள்ளது.
அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என கூற, இறுதியாக பேசி ரூ.50 லட்சத்தை தர ஒப்புக் கொண்டனர்.
பணத்துடன் செந்தில்குமார் அண்ணன் மற்றும் உறவினர்கள் செல்ல, பணத்தை வாங்கிக் கொண்டு செந்தில்குமாரைவிடுவித்துள்ளனர்.
இதனை கடத்தல் கும்பலுக்கு தெரியாமல், செந்தில்குமாரின் உறவினர்கள் ரகசிய கமெரா மூலம் வீடியோவாக எடுத்துள்ளனர்.
அந்த வீடியோவை பொலிசாரிடம் கொடுத்து, கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளனர்.
வீடியோவில் இருந்த தகவல்களைக் கொண்டு வாணியம்பாடி பொலிசார் விசாரணை மேற்கொண்டதில் முக்கிய தகவல்கள் கிடைத்தனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட பொலிசார் கூறுகையில், ‘பள்ளித் தாளாளர் செந்தில்குமார் கடத்தல் சம்பவத்தில், தலைவனாக செயல்பட்டது துணை நடிகர் அரி என்ற தகவல்எங்களுக்குக் கிடைத்தது. அதன் பின்னர், சென்னை செங்குன்றத்தில் பதுங்கியிருந்தகடத்தலில் ஈடுபட்ட கலீம், முத்து ஆகியோரைக் கைது செய்தோம்.
அவர்களிடமிருந்து 14 லட்சத்தை பறிமுதல் செய்தோம். அடுத்ததாக, தலைமறைவாக இருந்த அரி மற்றும்உதயகுமாரைத் தேடிக்கொண்டிருந்தோம்.
அரியோ சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதனால் அவரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.
பள்ளி நிர்வாகத்தை பழிவாங்கவும், படவாய்ப்புகள் இல்லாததால்ஏற்பட்ட பணத்தேவைக்காகவும்கூலிப்படையின் உதவியுடன் அரி, செந்தில்குமாரை கடத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
பிரபல நடிகர் இயக்குனர் சசிக்குமாரின் ம...
தாயகத்திற்கு நாடு கடத்தப்படும் அபாயத்த...
குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இன்று தி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
தனது மகளின் வயதில் இருக்கும் பெண்ணோடு ...
2018 ல் பேஸ்புக் வைத்த ஆப்பு..! அதிகமா...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
28 வயது மனைவியை கொடூரமாக வெட்டி சமைத்த...
திருமணமாகி 30 நிமிடத்தில் நடந்த கொடூர ...
மேலாடை இன்றி புகைப்படம் வெளியிட்ட பிரப...
உங்கள் முன் ஜென்ம துணை யார் என்பதை இந்...
கனடா வாழ் தமிழ் மக்களிடம் உதவி கேட்கும...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 440
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  740
  Shares