ஜூலியை கவனித்துக் கொள்ள ஒரு மனேயர் வேணும். நீங்களும் விண்ணப்பிக்கலாம்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 12.3K
 •  
 •  
 •  
 • 342
 •  
 •  
 •  
 •  
 •  
  12.7K
  Shares

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக ஒட்டுமொத்த தமிழகமே திரண்டு மெரினா கடற்கரையில் போராடியது. கடைசியில் வெற்றியும் கண்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அனைவரையும் வெகுவாக ஈர்த்தவர் ஜூலி. தனது மிரட்டல் வசனங்களால் ஆளும் கட்சியை கிழித்து தொங்க விட்டு கொண்டிருந்தார்.

அவர் பேசிய வசனங்களால் வீரத்தமிழச்சி என்றும் அழைக்கப்பட்டார்.ஜல்லிக்கட்டில் கிடைத்த புகழ் மூலம் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக அழைக்கப்பட்டார். ஆரம்பத்தில் அமைதியாக ஜூலியின் போக்கு பின்னர் மாறியது. தனது சுயநலத்துக்காக சில காரியங்களை செய்து மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து கொண்டார். ஜல்லிக்கட்டு மூலம் வீர தமிழச்சி என்று அழைக்கப்பட்ட இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இழந்தார்.

பிக்பாஸிலிருக்கும் போதே தனக்கு தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ஆக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது குழந்தைகள் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதுமட்டுமல்லாமல் விமலின் ‘மன்னர் வகையறா’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் நடுவில் ஒரு அப்பள விளம்பரத்தில் தோன்றினார். இது போன்று விளம்பரங்களிலும் தொகுப்பாளனியாகவும் கலக்கிக் கொண்டிருந்த ஜூலிக்கு ஜாக்பாட் அடித்தது. ஆம். அவர் தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அந்த படத்தில் இவருக்கு புரட்சி பெண் வேடமாம். படத்திற்கு உத்தமி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தான் நடித்துக்கொண்டிருக்கும் ‘உத்தமி’ படம் வெளியாவதற்கு முன்பே தனது கால்ஷீட் கவனித்துக் கொள்ள ஒரு மேனேஜரை நியமித்துள்ளாராம் ஜூலி. படமே இன்னும் வரவில்லை அதற்குள் இவ்வளவு அலப்பறையா என்று கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

இதையும் படிக்கலாமே
ஆவணக்கொலைகளை துகிலுரிக்கும் "களிற...
காயத்ரி பற்றி இப்படியா சொன்னார் ஓவியா....
எவ்வளவு கோடி கொடுத்தாலும் அந்த உடை அணி...
இலகுவாய் கிடைக்கும் பழங்களும் அதன் மரு...
விரைவில் இயக்குநராகும் நடிகர் கார்த்தி...
வலைதளத்தில் டிரெண்டாகும் பிரபல நடிகரின...
ச்சீ என்ன தான் நடிகை என்றாலும் இப்படி ...
நடிகர் பிரபு தேவாவின் அடுத்த காதல் காத...
நடிகை சமந்தாவின் புகைப்படம் வெளியாகி ப...
கமல், ரஜினிக்கு போட்டியாக ஜனவரியில் அர...
கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட சங்கமித்ரா...
நடிகை ஐஸ்வர்யா ராயை தவறாக பயன்படுத்திய...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 12.3K
 •  
 •  
 •  
 • 342
 •  
 •  
 •  
 •  
 •  
  12.7K
  Shares