முஸ்லீம் தொழுகை அழைப்பு(அதான்) க்கு தடை..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 483
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

ஜேர்மனியில் உள்ளூர் மசூதி ஒன்றில் வாராந்திர தொழுகைக்கான அழைப்புக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேற்கு ஜேர்மனியில் உள்ள நகரம் Oer-Erkenschwick, இங்குள்ள மசூதி ஒன்றுக்கே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நகரத்தில் வசிக்கும் கிறிஸ்தவ தம்பதியினர், muezzinஇன் தொழுகைக்கான அழைப்பு தங்களது மத உரிமைகளை மீறுவதாக உள்ளதாக புகாரளித்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், இந்த சத்தம் எங்களைத் தொந்தரவு செய்கிறது, அதைவிட அந்த அழைப்பின் கருத்துதான் முக்கியம், ஏனெனில் அது அவர்களது கடவுளை எங்கள் கடவுளுக்கு மேலாகச் சொல்லுகிறது. ஒரு கிறிஸ்தவ சமுதாயத்தில் வளர்ந்த என்னால் அதை ஏற்றுகொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
புகார் கூறிய தம்பதியின் வழக்கறிஞர் கூறுகையில், இதை கிறிஸ்தவ தேவாலய மணியோசையுடன் ஒப்பிடமுடியாது, ஏனெனில் அது ஒரு ஒலி, muezzinஇன் அழைப்போ வார்த்தைகளால் நிறைந்தது, அதுமட்டுமின்றி இந்த அழைப்பு மற்றவர்களையும் கேட்கும்படி கட்டாயப்படுத்துகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், தொழுகைக்கான அழைப்பை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், மத சுதந்திரம் என்னும் முறையில் இந்த வழக்கை அணுகாமல், முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதன் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், மசூதி மீண்டும் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தீர்ப்பு குறித்து மசூதி நிர்வாக அதிகாரிகளில் ஒருவரான Huseyin Turgut கருத்து தெரிவிக்கையில், மசூதி நிர்வாகம், தொழுகைக்கான அழைப்பு 2 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கிறது, அதுவும் வெள்ளிக்கிழமைகள் மட்டுமே. இதுவரை நாங்கள் இத்தகைய புகார்களைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை என தெரிவித்துள்ளார்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஓவியா வை காண ஒரு வாய்ப்பு !!
வேகமாக பகிருங்கள், ஏர்டெலை அதிரவைக்கும...
பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கும் 14 வ...
சினிமாவை மிஞ்சிய நிஜம்: ஆளில்லாமல் ஒடி...
அதிகமாக பகிருங்கள் .! உருளைகிழங்கு சாப...
மரணத்தின் வாயில் இருந்த சிறுவனுக்கு நட...
தாலி கட்டுவதற்கு 1மணி நேரதிற்கு முன்பு...
கணவரால் என் உயிருக்கு ஆபத்து".என்...
வரதட்சணைப் பணம் 2 லட்சம் ரூபாவிற்காக ச...
தற்போது கிடைத்த உள்ளூராட்சி தேர்தல் மு...
காதலர் தினத்தில் இலங்கையில் பூத்துக் க...
KFC உணவகங்கள் திடீர் மூடல் ...! காரணம்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 483
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares