வியூகம் அமைத்து சதுரங்கம் ஆடும் “நாக சர்ப தோஷம்” யாரை எப்படி குறி வைக்கிறது பாருங்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares

சதுரங்க ஆட்டத்தில் வியூகங்கள், உத்திகளைப் பயன்படுத்திப் பலரையும் ஆட்டிப்படைப்பது போல.. ஜாதக நிலைப்படி அவரது எதிர்காலம் கணக்கிடப்படும். அதோடு அவருக்கு ஏதேனும் தோஷங்கள் இருக்கிறதா? இதனால் அவருக்கு எத்தகையபாதிப்புகள், எந்த நேரத்தில் ஏற்படும் என்பதை நம்மால் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடிகிறது.
எல்லாரும் கேட்டவுடன் சற்று பயப்படுகிற தோஷங்களில் ஒன்று நாக சர்ப தோஷம். இது குறித்த பல்வேறு வதந்திகள் உலாவிக் கொண்டிருக்கின்றன.
முதலில்நாக சர்ப தோஷம் என்றால் என்ன அது யாருக்கெல்லாம்வரும், வந்தால் என்ன பலன் போன்ற அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் தேவையற்ற பயங்களிலிருந்து நீங்கள் விடுபடலாம்.
ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் கிரகங்கள் இருந்தால்அவை கால சர்ப்ப யோகம் எனப்படும். இதில் ராகு என்பது காலனையும், கேது சர்ப்பத்தையும் குறிக்கிறது.
இந்த இரண்டுக்கும் இடையில் மற்றஏழு கிரகங்களும் அடங்கியிருக்கும். இப்படி ராகு கேதுவுக்கு இடையில்ஏழு கோள்களும் இருக்கக்கூடியகாலத்தை சர்ப்ப காலம் என்று குறிப்பிடுகிறார்கள். அப்போது பிறக்கிற குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும்.
உங்கள் ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில்இருந்து மற்ற கட்டங்கள் காலியாக இருந்தால் மட்டுமே அவை நாக சர்ப தோஷமாகும்.
எதாவது ஒரு கிரகம் விலகியிருந்தால் கூட அவை நாக சர்ப தோஷம் ஆகாது. இவற்றில் கிரகங்கள் அமையும்தன்மை பொருத்து கால சர்ப தோஷம் பலவகைகளாக பிரிக்கிறார்கள். இதற்கேற்ற பலன்களும்இருக்கிறது.
முதல் வகை அனந்த கால சர்ப்ப தோஷம். ராகு முதல் வீட்டிலும் கேது ஏழாம்வீட்டிலும் இருப்பர். மற்றகிரகங்கள் இவர்களுக்குஇடையில் அமைந்திருக்கும். அதாவது முதலாவதும் கடைசியுமாகராகு கேதுஇருந்தால் அதற்கு பெயர் அனந்த கால சர்ப்ப தோஷம்.
இந்த தோஷம் இருப்பவர்களுக்கு இளமை காலம் மிகவும் சிரமமானதாகவும், கடினமானதாகவும் இருக்கும். சிலருக்கு திருமணத்தடை இருக்கும். அதன் பிறகான வாழ்க்கை அமைதியாய் அமைந்திடும்.
இரண்டாம் வீட்டில் ராகு மற்றும் கேது எட்டாம் வீட்டில் இருந்தால் அதற்கு குளிகை கால சர்ப்ப தோஷம் . இவர்களுக்கு பூர்வீக சொத்து நிலைக்காது,தொடர்ந்து உடல் நிலையில் எதாவது பிரச்சினைகள் வந்து கொண்டேயிருக்கும். 32வயதுக்கு மேல் நன்மைகள் உண்டு. பொருளாதரப் பின்னடைவு ஏற்படக்கூடும்.
ராகு மூன்றாம் வீட்டிலும் கேதுஒன்பதாம் வீட்டிலும் இருப்பதை வாசுகிகால சர்ப்பதோஷம் என்கிறார்கள். இது மனபலத்தை கெடுக்ககூடியது.
அதனால் இவர்களால் எந்த வேலையையும் துணிந்து செய்ய முன் வர மாட்டார்கள். இவர்கள் பார்க்கிற வேலை மற்றும் தொழிலில் ஏதாவது பிரச்சனைவந்து கொண்டேயிருக்கும். சகோதரர்களுக்கிடையில்விரோதப் போக்கு ஏற்படும்.
சங்கல்ப கால சர்ப்ப தோஷம் என்றால் நான்காம் வீட்டில் ராகுவும்பத்தாம் வீட்டில் கேதுவுமிருக்க வேண்டும். இவர்களுக்கு வாசுகிகால சர்ப்ப தோஷ தாக்கத்துடன் கூடுதலாக மன அழுத்தம் ஏற்படக்கூடும்.
திருமணத்திற்கு வெளியே ஏற்படுகிற உறவுமுறையினால் பல்வேறு சங்கடங்களை சந்திக்க நேரிடும். பெற்றோரின் உடல் நிலையில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
மஹா பதம கால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கு ஆறாம் வீட்டில் ராகுவும் பன்னிரெண்டாம் வீட்டில் கேதுவும் இருப்பார்கள். இது இளமைக்காலத்தை விட பிற்காலத்தில் தான் சிறந்த பலனை அளிக்கக்கூடியது.
அதிகாரபதவி, புகழ், அந்தஸ்த்து ஆகியவற்றை கிடைக்கச்செய்திடும். புகழின் உச்சியில் ஏற்றிவிடும் அதே சமயம் நம்மை அதளாபாதாளத்திற்கும் கொண்டு செல்லக்கூடியது இது. இவர்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்பு இருக்கும்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares