நாயின் மேல் ஏற்பட்ட காதலால் கணவனை விவாகரத்து கோரும் பெண் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.9K
  Shares

நாயிடம் ஏற்பட்ட தீராத அன்பு காரணமாக தனது கணவனையே விவாகரத்து செய்ய முற்பட்டுள்ளார் 2 குழந்தைகளின் தாயான 29 வயது இளம் குடும்பப் பெண்.தான் ஆசையாக வளர்த்த பொமேரியன் இனத்தைச் சேர்ந்த நாயை கணவன் தாக்கிக் காயப்படுத்தியதால் ஏற்பட்ட சண்டையாலே இந்த முடிவை மனைவி எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.குறித்த நாயை மனைவி தனது 4 வயது மற்றும் ஒரு வயதான இரு குழந்தைகளிலும் விட அதீத அக்கறையுடன் கவனிப்பதும் குழந்தைகளை கவனிக்காது விடுவதையும் கணவர் அவதானித்துள்ளார். மனைவி தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றிவிட்டு வீடு வந்ததும் குழந்தைகள் என்ன செய்கின்றன என்பதைக் கூடக் கவனிக்காது நாயுடன் கொஞ்சிக் குலாவுவதை வழமையாகக் கொண்டிருந்த மனைவியை கணவன் பல தடவைகள் கண்டித்துள்ளார். அன்பாகவும் சொல்லி கொடுத்துள்ளார் .எப்போதும் கேட்டாலும் நீ நாயை காதலிக்கிறாயா என்னையும் குழந்தைகளையும் கதலிக்கிறாயா என்று ..அவரது ஒரே பதில் நாயை காதலிக்கிறேன் என்பதாகும் . பாடசாலை ஒன்றில் ஆசிரியரான கணவன் பிரத்தியோக வகுப்புக்களுக்கும் செல்லாது பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாலும் மனைவி பிள்ளைகளைக் கவனிப்பதில்லை என தெரியவருகின்றது.இந் நிலையில் கடந்த புதன் கிழமை இரவு மனைவியால் ஆசையாக வளர்க்கப்பட்ட நாய் குழந்தைக்கு வைத்திருந்த சாப்பாட்டை சாப்பிட்டதை அவதானித்த கணவன் மனைவிக்கு முன்னால் நாயைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் மனைவி கணவனை ஏசியதாகவும் கணவன் மனைவியைத் தாக்கியதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் நாயைத் துாக்கிச் சென்று வெளியே கணவன் எறிந்துமுள்ளார்.உடனடியாக மனைவி அவசரப் பொலிசுக்கு தகவல் கொடுத்து கவணவர் தன்னைக் கொலை செய்ய முற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். பொலிசார் அங்கு சென்ற போது அவர்களுக்கு நிலை விளங்கியுள்ளது. இதனையடுத்து பொலிசார் அவர்கள் இருவரையும் கடுமையாக எச்சரித்த பின்னர் சென்றுள்ளனர்.

இந் நிலையில் கணவன் தனது பிள்ளைகளுடன் தனது தாயாரின் வீ்ட்டுக்குச் சென்றுவிட்டார். அதே நேரம் மனைவியும் சட்டத்தரணி ஒருவரை அணுகி தனக்கு கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரும்படியும் பிள்ளைகளை தன்னிடம் ஒப்படைக்கும் படியும் கேட்டுள்ளார்.
தற்போது இருவரையும் சமாதானப்படுத்துவதற்கு பலரும் முயன்று வருகின்றார்கள் எனத் தெரியவருகின்றது
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

வாழைப்பூ உருண்டை பிரியாணி
இளமையில் இதை சாப்பிடுங்கள் முதுமையிலு...
சதியால் என்னை வீழ்த்திய உங்களுக்கு என்...
100 பெண்களை பலாத்காரம் செய்த பிரபல டாக...
ஏலியன் பெண்ணை 8 வயதில் திருமணம் செய்த ...
முதலிரவில் கன்னித்தன்மை பரிசோதனையால் ப...
20 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த...
இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை ..! ...
இந்த சிரிப்புக்கு ஏற்பட்ட கொடுமையை பார...
லண்டனில் புலம்பெயர் தமிழர்களை கழுத்தை ...
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்டிக் பாண்டி...
நடிப்பில் கால் பதித்து கலக்கும் சூர்ய...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.9K
  Shares