நண்பனின் தற்கொலை – காக ஒரு கிராமத்தையே அதிர வைக்கும் இளைஞர்கள் ..! பயத்தில் நடுங்கும் மக்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 493
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    793
    Shares

இந்திய மாநிலமான தமிழகத்தில் விழுப்புர மாவட்டத்தில் நண்பன் தற்கொலை செய்து கொண்டதால் 20-க்கும் மேற்பட்டநண்பர்கள் கிராமத்துக்குள் புகுந்து 15 மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கியும், 30 வீடுகளை சூறையாடியும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). ஓட்டுநரான இவர் அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான டிராக்டரை வாடகைக்கு ஓட்டி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் தேவனூர் கிராமம் வழியாக டிராக்டரை ஓட்டி சென்றபோதுஅந்த வழியாக வந்த ஆட்டோவும், டிராக்டரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இதில் ஆட்டோவில் பயணம்செய்த பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி ஆனந்தாயி (32) என்பவர் காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது டிராக்டர் ஓட்டுநர் மணிகண்டனிடம் இருந்து மருத்துவ செலவுக்காக ரூ.4500-ஐ அங்கிருந்தவர்கள் வாங்கிய பின்னர் அவரது முதலாளியிடமும் சென்று பணம் கேட்டுள்ளனர்.
25 ஆயிரம்கேட்ட ஆனந்தாயியின் உறவினர்களுக்கு டிராக்டர் உரிமையாளர் செல்வராஜ் 5 மட்டும் கொடுத்துவிட்டு மீதம் பின்பு தருவதாக கூறி அனுப்பியுள்ளார்.
அதன்பின்புமணிகண்டனிடம் உனக்கு எனக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்று சத்தம் போட்டுள்ளார். இதனால் மனவருத்தத்துடன் காணப்பட்ட மணிகண்டன் தனது நண்பர்களான சீனிவாசன், விஜயகுமார் ஆகியோரிடம் கூறியுள்ளார்.
இவர்கள் இருவரும் ஆனந்தாயியின் உறவினரிடம் எதற்காக பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்கிறீர்கள்என்று தகராறு செய்துள்ளதை அவதானித்த நபர் ஒருவர் விஜயகுமார் தந்தை ராமலிங்கத்திடம்மகன் இவ்வாறு தகராறு செய்கிறான்என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ராமலிங்கம் தனது மகன் விஜயகுமாரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த விஜயகுமார் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து விஜயகுமாரின் நண்பர்கள் 20க்கும் மேற்பட்டோர் அக்கிராமத்திற்கு நுழைந்து 15 மோட்டார் சைக்கிள், 30 வீடுகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். தகவலறிந்த பொலிசார் விரைந்து வந்து விஜயகுமாரின் நண்பர்கள் சிலரை கைதுசெய்துள்ளனர்.
தப்பியோடியசிலரையும் தேடிவருகின்றனர். இதனால் இரு கிராமமும் பதற்றத்துடன் காணப்படுவதுடன், பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
நாகரீகம் இல்லையா உனக்கு? மேடையிலேயே தன...
விஜய் கோழையாக இருப்பது வருத்தமளிக்கிறத...
தாய் தமிழுக்காக இசை நிகழ்ச்சி நடத்தும்...
VJ.ரக்‌ஷன் வீட்டிற்கு சென்று ஜூலி அதிர...
இந்தியாவிற்குள் பறக்க டிக்கெட் ரூ. 99 ...
குடியால் கெட்ட குடித்தனம் வைத்த பிரபல ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
தளபதி 62வில் நடிக்கவுள்ள பிக் பாஸ் ஜூல...
1நிமிடத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்...
இரண்டு குழந்தைகளை தந்தை செய்யும் கொடூர...
உதவிகேட்டு கதறியும் யாரும் வராத நிலையி...
பிரான்ஸ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை .....

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 493
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    793
    Shares