இப்படியும் சிலர் இருக்கிறார்கள் …! நாம் தான் கண்டுகொள்வதில்லை ..! நீங்களே பாருங்கள்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 792
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares

கடந்த சில நாட்களாகவே உணவக விவகாரத்தில் கொங்கு மண்டலம் பிரபலமடைந்து வருகிறது.
ஒரு பக்கம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கழிப்பிடம் சென்றதிற்கு ஜி.எஸ்.டி வரியோடு சேர்த்து பில் போட்டது, மறுபுறம் கோடிகளை கொட்டினாலும் அடைய முடியாத புண்ணியத்தை தனது அதிரடி அறிவிப்புகளால் செய்து காட்டும் ஒரு உணவக உரிமையாளர் என்று கலை கட்டுகிறது.
அந்த பில் விசயம் எல்லாம் நமக்கு இப்போ வேண்டாம். நல்ல விசயங்கள் நாலு தெரிந்து கொள்வோம்.
கோவையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு ரூ. 10-க்கு 5 இட்லியை வழங்கி வருகிறார் ஒரு தனியார் ஓட்டல் உரிமையாளர்.
பள்ளி சீருடையுடன் எந்த குழந்தை டிபன் பாக்ஸ் எடுத்து சென்றாலும் அங்கு இப்படி குறைந்த விலையில் உணவு வழங்கப்படுவது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
எதை பார்த்தாலும் விற்று காசாக்க பார்க்கும் இந்த வியாபார உலகில், இது போன்றும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆனால் தங்கள் சேவையை நல்லவர்கள் யாரும் சொல்லிகாட்டி விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. அது பிறர் மூலமாகவே நமக்கு தெரிய வருகிறது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அமைந்துள்ள அந்த உணவகத்தின் உரிமையாளரான ராசு, பள்ளி மாணவர்களுக்கு குறைந்த விலையில் காலை உணவை அளிப்பதன் மூலமாக இன்று பல குழந்தைகளின் ஒருவேளை தேவையை தன்னால் இயன்ற அளவு பூர்த்தி செய்து உள்ளார்.
இது குறித்துஅவர் கூறுகையில்,எனக்கு இந்த எண்ணம் தோன்றியதே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து தாங்க. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அந்நிய குளிர்பானங்களை தவிர்க்குமாறு மாணவர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் எங்களுடைய ஓட்டலில் அந்நிய குளிர் பானங்கள் விற்கப்படுவதில்லை.இருந்தாலும் அந்த மனநிறைவு போதவில்லை. அதனால் தான் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 5 இட்லி 10 ரூபாய்க்கு வழங்கி வருகிறேன்.

இந்த திட்டத்தை ஆரம்பித்ததே தமிழர் திருநாள் அன்று தான். அப்போது முதல் துவங்கப்பட்ட இந்தத் திட்டம் இப்போது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது’ என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், எதற்காக டிபன் பாக்ஸ் கொண்டு வரச்சொல்கிறோம் என்றால் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து குழந்தைகளும் அறிந்து கொள்ளும் வகையில் தானுங்க.
இட்லிக்கு தேவையான சாம்பார், சட்னி பிளாஸ்டிக் கவர்களில் கொடுக்காமல் பாத்திரங்களில் வழங்குகிறோம்’ என்கிறார் புன்சிரிப்புடன்.
கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியிலேயே இவரது ஓட்டலில் தான் குறைந்தபட்ச விலையில் உணவுகள் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: சிம்பிளி சிட்டி
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
சிவாஜி கனேசன்,ரஜினி,கமல்
சாம்பார் பிரியரா நீங்கள்.?இதோ ஆபத்து உ...
குங்க்பூ,டிராகன் மரணத்தின் காரணம் இதுவ...
பட வாய்ப்புகள் குறைந்ததால் நடிகை ஹன்ஷி...
முதலிரவில் இதெல்லாம் எதுக்கு தெரியுமா?...
குறிவைக்கப்பட்டுள்ள தமிழ் நாட்டு இளம் ...
இயேசு பிறந்த பெத்லஹேம் பற்றி தெரிந்து...
படபிடிப்பு தளத்தில் பிரபல இயக்குனர் ரா...
பிராமண சமூகத்தில் பிறந்து காதலுக்கா த...
வைரமுத்துவை படுகொலை செய்யத் திட்டம்..!...
ஒரு வாரமாக பூட்டிய வீட்டிற்குள் இருந்த...
அவதானமாக இருங்கள் உங்கள் ஆதார் அட்டையை...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 792
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares