தாயினால் ஊசியில் கொசுமருந்து ஏற்றிக் கொள்ளப் பட்ட 2 வயது குழந்தை..! வெளிவந்த மனதை உருக்கும் காரணம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares

கணவர் இறந்ததால் துயரம்: குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை முயற்சி
சேத்துப்பட்டில் கணவர் இறந்த துயரத்தில் குழந்தையைக்கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
சென்னை சேத்துப்பட்டு சீனிவாசன் தெருவில் வசிப்பவர் கீதா(25), திருவல்லிக்கேணியில் உள்ள கால் சென்டரில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 வயதில் ரோகித் என்ற மகன் உள்ளார். இவரது கணவர் ஸ்ரீதர்(35) கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குடும்பப் பிரச்சனை காரணமாக, திருவண்ணாமலையில் தனது தாயாரின் வீட்டில் வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதன் பின்னர் கீதா சேத்துப்பட்டில் உள்ள தனது தாய், தந்தை, அண்ணன் மற்றும் மனைவி உடன் சொந்த வீட்டில் முதல் தளத்தில் குடியிருந்து வருகிறார்.
கணவர் இறந்ததிலிருந்து கீதா தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார், வேலைக்குச் சென்று வரும் அவர் தனது மகனை யாரும் சரியாக கவனிக்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த அவர் தனது மகனை யாரும் கவனிக்கவில்லை எனவும் அதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை எனவும் தான் சாக போவதாகவும் தன்னுடைய சாவிற்கு யாரும் காரணம் இல்லை என கூறி டைரியில் எழுதி வைத்துவிட்டு நேற்று காலை 07.00 மணியளவில் சமையலறையில் தனது துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தனது தான் தற்கொலைக்கு முயலும் முன்பு தனது 2 வயது மகன் ரோகித்துக்கு ஊசிமூலம் கொசுமருந்தை செலுத்தி கொன்றுள்ளார். பின்னர் தனது இடது கை மணிக்கட்டில் கத்தியால் கீறியுள்ளார். பின்னர் அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரையும் குழந்தையையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை ரோகித்தை சோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னரே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட கீதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இது குறித்து சேத்துப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தையைக் கொன்று தாய் தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
சினிமா நடிகை என்றால் உடலை விற்றுத் தான...
அரசியலில் தனிக்கட்சி ஆரம்பிக்கும் கமலு...
பிரான்ஸில் அரசியல் ஆலோசகராக ஈழத்து சிற...
அட பாவிகளா இதையும் விடமாட்டிங்களா?? மன...
சென்னை வாசிகளே உஷார்..! எண்ணூர் கழிமுக...
அழகான மணப்பெண்ணாக நமீதா. ! திருமண போட...
எச்சரிக்கை:- இந்த உணவுப் பொருட்களை கழு...
ஜெயலலிதா வழக்கில் மீண்டும் குழப்பம் . ...
ஆண் குழந்தை ஆசையில் பெண் குழந்தையை கொன...
இளம் பெண்கள் மர்ம மரணத்தில் இந்த நடிகர...
இறுதியாக கணவன் சொன்ன "ஐ லவ் யூ &q...
கனடா வாழ் தமிழ் மக்களிடம் உதவி கேட்கும...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares