இலங்கையில் பிறந்தவுடனேயே வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தை..! கனடாவில் கிடைத்த அதிஷ்டம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.3K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares

பிறந்தவுடன் தூக்கி வீசப்பட்ட நிலையில் தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் தற்போதைய நிலை தொடர்பில் கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது கனடாவில் வசித்து வரும் Kacee Rhodes என்பவர் தொடர்பிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.
Kacee Rhodes விரைவில் தனது 30 வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். ஒரு குழந்தையாக இலங்கை தெருவில் தூக்கி எறியப்பட்ட பின்னர் யுத்தத்தில் இருந்து தப்பி தனது வாழ்க்கையில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஒரு தைரியமான மற்றும் துனிச்சலான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக அவர் முதல் முறையாக தனது பிறந்த நாட்டிற்கு திரும்பவுள்ளார். தான் வளர்ந்த பீட்டர் வீரசேகர அனாதை இல்லத்திற்கு அவர் மீண்டும் செல்லவுள்ளார்.
Rhodes இப்போது கனடாவின் Calgary பகுதியில் பதிவு செய்யப்பட்ட ஒரு தாதியாக பணியாற்றுகிறார். அவர் 4 மாத குழந்தையாக இருந்த போது Mark மற்றும் Gail Rhodes தம்பதியினால் தத்தெடுப்பட்டார்.
இலங்கையின் உள்நாட்டு போர் இடம்பெற்ற 1988ஆம் ஆண்டில் Mark மற்றும் Gail Rhodes இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது Rhodesயை தத்தெடுத்தனர்.
Rhodes தற்போது இலங்கைக்கு செல்லவுள்ளார். அதற்கமைய அடுத்த மாதம் அவர் தனது தந்தை மற்றும் காதலனுடன் இலங்கைக்கு செல்லவுள்ளார்.
என்னை பெற்ற பெற்றோர் தொடர்பில் எவ்விதமான சான்றுகளும் இல்லை என Rhodes தெரிவித்துள்ளார்.
கைவிடப்பட்ட விடயம் பற்றி நான் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை. பணம் இல்லாத காரணத்தினால் பெற்ற பிள்ளைகளை பிச்சை எடுப்பதற்காக விட்டுவிடுவார்கள் என தந்தை விளக்கியுள்ளார்.
சுற்றுலா பயணிகளின் அனுதாபத்தைப் பெறவும் பணம் சம்பாதிக்கவும் இந்த குழந்தைகளின் கைகளையும் கால்களையும் அடிக்கடி உடைக்க வேண்டும். என்னை பெற்ற பெற்றோர் எளிதாக என்னுடன் இருந்திருக்கலாம், ஆனால், நான் ஒரு அனாதையாக வைக்கப்பட்டேன். எனினும் அடிப்படையில் நான் ஒரு அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்.
என்னை தத்தெடுத்து வளர்த்த பெற்றோர் என்னை மகிழ்ச்சியாக வளர்த்தனர். அன்பாக பார்த்து கொண்டனர். அதனால் நான் அதிக அதிஷ்டசாலியாக கருதுகின்றேன்.
நான் வளர்ந்த இல்லத்திற்கு உதவ விரும்புகின்றேன். அதற்காக பணம் சேகரிக்கும் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். எனது 30வது பிறந்த நாளை நான் வளர்ந்த இல்லத்தில் கொண்டாடுவதற்கு கனடாவில் இருந்து இலங்கை செல்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
Bigg Boss சுஜாவின் ஏமாற்று வேலைகள் வெள...
MERSAL Film Teaser Review
நானும் அந்த மாதிரி படங்களில் நடிக்கிறே...
திரைப்பட பிரச்சனையால் தீபிகா படுகோன் எ...
எச்சரிக்கை : நாய் கடித்து விட்டால் இதை...
இப்படியுமா நடக்கிறது.. நீங்கள் அறிந்தி...
விஜய் 62ல் பிக் பாஸ் ஜூலி, அஜித் 58 ல்...
உடல் தெரிய ஆடை அணியும் பெண்களுக்கும் அ...
விக்னேஷ் சிவனுக்கு கீர்த்தி சுரேஷ் இப்...
நடிகை ரஞ்சிதாவின் சொகுசு கார் பெங்களூர...
பிரான்ஸ் சட்டத்தில் மாற்றம்..! ஸ்மார்ட...
ஜேர்மனி வாழ் மக்களுக்கு ஆபத்து எச்சரி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.3K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares