இறுதியாக கணவன் சொன்ன “ஐ லவ் யூ ” மனைவியின் மடியில் உயிர் பிரிந்த சோகம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares

பிரித்தானியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கணவன், மனைவி கையில் சாய்ந்தபடி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hertfordshire கவுண்டியை சேர்ந்தவர் வெயின் பார்டன் (36), இவரின் மனைவி லிசா (37), தம்பதிக்கு பிரயோனி மே (5) என்ற மகள் உள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு வெயினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது உணவுக்குழாய் மற்று கல்லீரலில் வெயினுக்கு புற்றுநோய் உண்டாகியிருப்பது தெரியவந்தது.
இந்நோயை குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில் தொடர் சிகிச்சையில் வெயின் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 27-ஆம் திகதி நோய் பாதிப்பு வெயினுக்கு அதிகமாக, தனது மனைவி லிசாவின் கையில் சாய்ந்தப்படி உயிரிழந்துள்ளார்.
வெயினின் இறுதிச்சடங்கு பிப்ரவரி 14-ஆம் திகதி காதலர் தினத்தன்று நடைபெறவுள்ளது.
இது குறித்து லிசா கூறுகையில், சில மாதங்களாகவே வெயினால் சரியாக பேச முடியவில்லை, என் கையில் சாய்ந்தபடி இறப்பதற்கு முன்னால் என்னை பார்த்து ஐ லவ் யூ என வெயின் கூறினார்.
இது என் வாழ்க்கையின் மிக கடினமான நிமிடமாக இருந்தது, வெயின் இறக்கும் போது அருகில் அவர் தாய் மற்றும் சகோதரரும் உடனிருந்தனர்.
அவரை பிரிந்து நானும், பிரயோனியும் எப்படி வாழ போகிறோம் என தெரியவில்லை.
வருங்காலம் குறித்து யோசிக்கவில்லை என சோகத்துடன் கூறியுள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
தீபாவளி யாரால் எதற்காக கொண்டாடப் படுகி...
அறிமுகம் : அன்லிமிடெட் வாய்ஸ் &amp...
அந்த நடிகை தான் வேண்டும்: அடம்பிடித்த ...
என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பெயர் வ...
தந்தையை இழந்த 251 பெண்களுக்கு திருமணம்...
சொந்த மகனையும், மகளையும் திருமணம் முடி...
சிங்கப்பூரில் கவர்ச்சிகரமான சம்பளத்துட...
இளம்பெண்ணை உயிரோடு கொளுத்திய இளைஞர்&qu...
சினிமா ஸ்டைலில் காதலியின் தந்தையிடம் ச...
புதிதாக திருமணமான இளம் பெண்ணை இந்த விட...
தமிழனின் சவாலை ஏற்ற பாலிவூட் பிரபலங்கள...
மானமுள்ள தமிழன் எவனும் நடிகர் அஜித்துக...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares