விருப்பமில்லா திருமணத்தால் 17 பேரை கொலை செய்த புதுமணப் பெண் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 477
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  777
  Shares

விருப்பத்துக்கு மாறாக மணமுடித்து வைக்கப்பட்டதால் கோபம் கொண்ட இளம் புதுமணப் பெண், பதினேழு பேருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானின் பஞ்சாப் மானிலத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணுக்கு செப்டம்பர் மாதம் திருமணமாயிற்று. அவர் ஏற்கனவே காதல் வயப்பட்டிருந்தார். தனது விருப்பத்துக்கு மாறாக குடும்பத்தினர் திருமணம் முடித்து வைத்ததில் அவர் கடும் கோபத்தில் இருந்தார்.
இந்த நிலையில், தனது கணவரைக் கொலை செய்வதற்காக, அவருக்குக் கொடுக்கப்படவிருந்த பாலில் அப்பெண் நஞ்சைக் கலந்தார். எனினும், நஞ்சூட்டப்பட்ட அந்தப் பால் எப்படியோ குடும்பத்தின் ஏனையவருக்கும் வழங்கப்பட்டது. இதனால் மணமகன் உட்பட அவரது உறவினர்கள் பதினேழு பேர் மரணமாயினர்.
இவ்விவகாரம் குறித்து ஆராய்ந்த பொலிஸார், குறித்த பெண்ணை விசாரணை செய்தனர். அதில், அப்பெண்ணும் அவரது காதலரும் சேர்ந்தே கணவனைக் கொல்லத் திட்டமிட்டதாகவும், அது தவறுதலாக மற்றவர்களுக்கும் எமனாகிவிட்டது தெரியவந்துள்ளது.
பெண்ணையும் அவரது காதலரையும் கைதுசெய்துவிட்டபோதும், இவ்விவகாரத்தில் எவ்வாறான முடிவு எடுப்பது என்று பொலிஸார் குழம்பிப் போயிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
மனைவி போன பின் கணவன் படும் துயர் !!!
நடிகை சமந்தாவின் கண்கலங்க வைக்கும் இன்...
ஜெயலலிதா ஒக்டோபர் மாதமே உயிரிழந்து விட...
நடக்க கூட முடியாத நிலையில் வீல் சேரில்...
இனி மேல் நடிக்க மாட்டேன் ..! நடிகர் சி...
அம்மாடீயோ நடிகர் அர்ஜூனுக்கு இவ்வளவு அ...
நடிகை மைனா நந்தினிக்கு இரண்டாவது திரும...
கனடாவில் 17 வயது சிறுவன் கத்தியால் குத...
யாழில் நேற்றிரவு மர்ம நபரினால் பெண் ஒர...
152 வருடத்தின் பின் தோன்றிய சந்திர கிர...
இலங்கையில் கணவர்கள் மீன் பிடிக்க சென்ற...
திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 477
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  777
  Shares