இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 576
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1K
  Shares

இன்றைய பஞ்சாங்கம் 10-02-2018, தை 28, சனிக்கிழமை, தசமி திதி பகல் 02.44 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. கேட்டை நட்சத்திரம் இரவு 07.52 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
“மேஷம்”
மேஷம்: இன்றும் இரவு 10.10மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். 
“ரிஷபம்”
ரிஷபம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவு பெருகும். விலையுயர்ந்த எலக்ட்ரா னிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தை புது இடத்திற்கு கடையை மாற்று வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.
“மிதுனம்”
மிதுனம்: வர வேண்டிய பணம்கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
“கடகம்”
கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சுற்றி யிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
“சிம்மம்”
சிம்மம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை கிடைக்கும். பால்ய நண்பர்கள் உதவு
வார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
“கன்னி”
கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.
“துலாம்”
துலாம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள்.
“விருச்சிகம்”
விருச்சிகம்: இன்றையதினம் இரவு 10.10மணி வரை சந்திரன் ராசிக்குள் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
“தனுசு”
தனுசு: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சகோதரங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
“மகரம்”
மகரம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி பாராட்டுவார். இனிமையான நாள். 
“கும்பம்”
கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேசத்தொடங்குவார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
“மீனம்”
மீனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். புத்துணர்ச்சி தொடங்கும் நாள்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
தினமும் உடற்பயிற்சி செய்றிங்களா? கொஞ்ச...
விஜய் பற்றி கொச்சையாக பேச தொடங்கிய எச்...
ஆண் குழந்தைகளிடம் இந்த வார்த்தைகளை மட்...
1நிமிடத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்...
அம்மாடீயோ..எத்தனை அழகு ..! இந்த அழகி ...
தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி துலங்கு...
நடுரோட்டில் துடிக்கத் துடிக்க இளம் பெண...
காதல் திருமணம் செய்துகொண்ட அண்ணன்- தங்...
கோழியுடன் உடலுறவு கொண்ட இளைஞன் .அடச்சி...
என்ன தான் நடக்குது டெல்லியில்..! அடுத்...
ரயில் நிலையத்தில் அனாதையாய் விழுந்த தம...
வீறிட்டு கதறி அழும் குழந்தையை வீதியில்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 576
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1K
  Shares