இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 487
 •  
 •  
 •  
 • 543
 •  
 •  
 •  
 •  
 •  
  1K
  Shares

இன்றைய பஞ்சாங்கம் 11-02-2018, தை 29, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி மாலை 05.24 வரை பின்பு தேய்பிறை துவாதசி. மூலம் நட்சத்திரம் இரவு 10.59 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் இரவு 10.59 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,இன்றைய ராசிபலன்“மேஷம்”மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டி பணம் கைக்கு வரும். நீண்ட நாட்களாக தள்ளி போன காரியங்கள் முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிம்மதி கிட்டும் நாள்.”ரிஷபம்”

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். மற்றவர்களைப்பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பழைய பிரச்னைகள் தலைதூக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.“மிதுனம்”மிதுனம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். உங்களை தேடி நல்ல வாய்ப்புகள் வரும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.“கடகம்”கடகம்: எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.“சிம்மம்”சிம்மம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல் படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வாகன பழுது நீங்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.“கன்னி”கன்னி: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புது வேலை அமையும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.“துலாம்”துலாம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.“விருச்சிகம்”விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.“தனுசு”தனுசு: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். சிலர் உங்களிடம் நயமாக பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.“மகரம்”மகரம்: விடாப்பிடியாக செயல் பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். அவசர முடிவுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.“கும்பம்”

கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. உங்களால் வளர்ச்சி யடைந்த சிலரை இப் பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.“மீனம்”மீனம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர் வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளை கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரார்த்தனை களை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கு வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். சாதித்துக் காட்டும் நாள்.

இதையும் படிக்கலாமே
Vivegam Official Tamil Trailer
பெண் குழந்தையின் அன்பு
( புற்றுநோய் - CANCER ) கேன்சர் ஒரு நோ...
சுந்தர் பிச்சையின் வெற்றியின் சரித்திர...
அம்மா சொல்லை கேட்காததால் சிறுமி பரிதா...
12 வயதில் ஆபாச திரைப்படங்களுக்கு அடிமை...
கர்ப்பனி பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய...
பில்லி,சூனியதிற்கு எலுமிச்சை எடுப்பது ...
பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட சிறுமி...
இந்த பெண் யார் தெரியுமா ..!? என்ன ஷாக்...
இதைவிட சிறந்த காதலர் தின பரிசொன்றை எந்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 487
 •  
 •  
 •  
 • 543
 •  
 •  
 •  
 •  
 •  
  1K
  Shares