நான்கு மனைவிகள் கணவருக்கு செய்த செயல் …! இது தான் வாழ்க்கை ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 429
  •  
  •  
  •  
  • 209
  •  
  •  
  •  
  •  
  •  
    638
    Shares

ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்கார வியாபாரி இருந்தான். அந்த வியாபாரிக்கு நான்கு மனைவிகள். அவனது முதல் மனைவி தான் உண்மையான வாழ்க்கை துணையாகவும், அவனது தொழில் மற்றும் சொத்துகளையும் பேணிக்காத்து வந்தால். அவள்தனது கணவனை மிகவும் நேசித்த போதிலும், அவன், மற்ற மனைவிகளை தான் விரும்பினான்.ஒரு நாள் அந்த வணிகன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மரண படுக்கைக்கு தள்ளப்பட்டான். அந்த நேரத்தில், தனது ஆசைக்கும், விருப்பத்திற்குமான கடைசி மனைவியை தன்னுடன்தங்கியிருக்க கூறினான்…..நான்காம் மனைவியின் பதில்…”நீ என் அருகில்இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று கேட்டான். அவள்என்னல் முடியாது..” என கூறி கணவனை அம்போவென விட்டுப் சென்றுவிட்டாள். நான்காவது மனைவியின் பதில் அந்த வியாபாரியை மிகவும் மன வருத்தம் அடையசெய்தது.

மூன்றாவது மனைவியின் பதில்…பிறகு அந்த வியாபாரி தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்….அதற்கு அவள், “முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம்செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்.” என கூறி கணவனை அம்போவென விட்டுப் சென்றுவிட்டாள். இதை கேட்டதும் மரண படுக்கையில் இருந்த வியாபாரியின் மனம் உடைந்தே போனது.இரண்டாவது மனைவியின் பதில்…பிறகு அந்த வியாபாரி தனது இரண்டாவது மனைவியை அழைத்தான்….அதற்கு அவள், “நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்” என கூறி கணவனை அம்போவென விட்டுப் சென்றுவிட்டாள். இந்த பதிலை வியாபாரியால் தாங்கிக்கொள்ளவேமுடியவில்லை.முதல் மனைவியின் பதில்…மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருந்தவியாபாரியை கண்டு முதல் மனைவி…

“நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும்நான் உங்களைப் பின்பற்றுவேன்” என கூறு ஆறுதலாக பேசினால். ஆனால், முதல் மனைவியோ, உணவு குறைபாட்டால்மெலிந்து காணப்பட்டாள். வியாபாரி, “நான் நன்றாக இருந்த சமயம், உன்னைக்கவனித்திருக்க வேண்டும்..” என கூறி தனது வருத்தத்தை வெளிப்படுத்தினான்.யார் இந்த நான்கு மனைவிகள்?இந்த கதையில் வரும் வணிகனை போல் நம் எல்லோருக்கும் நான்குமனைவிகள் இருக்கிறார்கள்.”நான்காம் மனைவி:”நம்முடையஉடல் அழகு . அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது.மூன்றாம் மனைவி:நம்முடையஉடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.”இரண்டாம் மனைவி:”என்பது நம்முடையகுடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான்அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை எரியூட்டுமிடம் வரைதான்நம்முடன் வருவார்கள்.

முதல் மனைவி:

நம்முடையஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.

யோசிங்க!

எனவே, வாழ்க்கையின் உண்மையை அறிந்து, எது நம்முடன் கடைசிவரை தங்கும், எது தற்காலிகமானது என்பதை தெளிந்த அறிவுடன் அறிந்து, நல்ல முறையில் வாழ கற்றுக் கொள்ளுங்கள்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
புதைக்கும் போது அழுத குழந்தை.அதிர்ச்சி...
என் முதல் எதிரி அப்துல் கலாம்.சொன்னது ...
ஜல்லிகட்டு போராட்டத்தில் காக்கி உடையுட...
அரசியலில் குதிக்கும் நயன்தாரா.! இந்த க...
’பல அவமானங்கள், தோல்விகளைச் சந்திச்சு ...
கன்னியாகுமரியில் நிலைகொண்டுள்ள "ஓ...
விஜய் 62ல் பிக் பாஸ் ஜூலி, அஜித் 58 ல்...
பள்ளி பாட புத்தகத்தில் இளைய தளபதி விஜய...
நடுரோட்டில் துடிக்கத் துடிக்க இளம் பெண...
சுந்தர் பிச்சையின் வெற்றியின் சரித்திர...
லண்டனில் தமிழர்களின் கழுத்தை அறுக்க போ...
எருமை மாட்டின் மீது நிர்வாண சவாரி..! ப...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 429
  •  
  •  
  •  
  • 209
  •  
  •  
  •  
  •  
  •  
    638
    Shares