கனடாவில் கடந்த வருடம் உயிருக்கு போராடிய இளைஞன் இவ்வருடம் சாதனையாளனாக…!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 406
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  714
  Shares

ஒரு வருடத்துக்கு முன்பு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வீரர், தற்போது ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.கனடாவை சேர்ந்த பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் Mark McMorris.ஒரு வருடத்திற்கு முன்பு பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபத்தினால் படுகாயம் அடைந்தார்.பல எலும்புகள் நொறுங்கி உடலின் உட்புறத்தில் கடும் ரத்த கசிவுடன் உடைந்த தாடை, சிதைந்த கல்லீரல், பாதிக்கப்பட்ட நுரையீரலுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் இந்த வருடம் கம்பீரமாக ஒலிம்பிக் மேடையில் நின்று அதே பனிச்சறுக்கு விளையாட்டில் வெண்கல பதக்கம் வென்று அதிசயக்க வைத்துள்ளார்.விபத்துக்கு பின் இவரது கால் தொடை பகுதி எலும்புகள் கடும் சேதம் அடைந்ததால் இரும்பு தட்டு வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பதக்கம் வென்ற பின் பேசிய Mark McMorris, விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நான் நிச்சயம் உயிர் பிழைப்பேன் என எதிர்பார்க்கவில்லை, ஆனால் இன்று தனது கனடா நாட்டின் சார்பில் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது பெறும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த வருடம் எனக்கு ஏற்பட்ட காயங்கள் தான் என்னை இந்த இடத்தில் நிற்க உத்வேகம் அளித்தது என உருக்கத்துடன் பேசியுள்ளார்.இவர் கடந்த 2014ம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் பனிச்சறுக்கு விளையாட்டில் கனடாவுக்கு வெண்கலம் வாங்கி தந்தது குறிப்பிடத்தக்கது. அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் . அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
சூரியனில் மிகப் பெரிய ஓட்டை.! பூமியை த...
இந்த வார்த்தையை இனி இஸ்லாமிய ஆண்கள் சொ...
அறிவியல் ஆய்வுகளை அலற விட்ட தமிழர்கள்....
வைத்தியசாலையில் பிரபல நடிகையின் செயல்....
திடீரென கண் திறந்த அம்மனால் பரபரப்பு ....
நடிகர்களை செருப்பால் அடிக்கச் சொன்ன மல...
தகாத உறவால் பரவும் கொடிய நோய்களின் அறி...
கற்பழித்து தூக்கிவீசப்பட்ட பெண் பிரதமர...
தெரு ஓரத்தில் நின்று தாய் பால் விற்றபெ...
பக்கத்து வீட்டு பெண் வீட்டு பெண் கேட்ட...
திருடர்கள் பயத்தில் எக்ஸ்ரே மெஷினில் ந...
ரசிகர்களை கண்டு தெறித்து ஓடிய நடிகர் வ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 406
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  714
  Shares