இதைவிட சிறந்த காதலர் தின பரிசொன்றை எந்த ஆண்மகனாலும் பெண்ணுக்கு கொடுக்க முடியாது..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.8K
  Shares

லக்னோ : ‘ஆசிட்’ வீச்சில் கடுமை யாக பாதிக்கப்பட்ட, 25 வயது பெண்ணுக்கும், அவரது நீண்ட கால நண்பருக்கும், காதலர் தினமான நேற்று, திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.ஒடிசா மாநிலம், ஜகத்பூரைச் சேர்ந்த இளம்பெண், பிரமோதினி, 2009ல், கல்லுாரியில் தேர்வு எழுதி, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, பிரமோதினி காதலிக்க மறுத்ததால், ஆத்திரத்தில் இருந்த ஒருவன், அவர் மீது, ஆசிட் வீசி தப்பி ஓடினான்.இதில், பிரமோதினிக்கு, 80 சதவீத காயங்கள் ஏற்பட்டன; கண் பார்வையும் பாதிக்கப்பட்டது.ஜகத்பூரில், ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிரமோதினியை, 2014ல், மருத்துவ பிரதிநிதி, சரோஜ் சாஹுவுக்கு, அந்த மருத்துவமனை நர்ஸ் அறிமுகம் செய்து வைத்தார்.ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் படும் வேதனையை அறிய வந்திருந்த சரோஜ், பிரமோதினிக்கு உதவி செய்ய துவங்கினார்; நாளடைவில், தன் வேலையையும் உதறி, முழு நேரமும், பிரமோதினிக்கு சேவை செய்தார்.

‘பிரமோதினி நடக்க, 10 மாதங்களாகும்’ என, டாக்டர்கள் கூறியிருந்தனர். ஆனால், சரோஜின் ஆறுதல் வார்த்தைகள் மற்றும் உதவியால், நான்கு மாதங்களில் எழுந்து நடக்க துவங்கினார்.பின், ‘ஆசிட் வீச்சை நிறுத்துங்கள்’ என்ற பிரசாரக் குழுவினரின் தொடர்பு, பிரமோதினிக்கு கிடைத்தது. அவர்களின் ஆலோசனைப்படி, டில்லி சென்ற பிரமோதினி, அங்கு சிகிச்சை பெற்றார்.பிரமோதினி, ஒடிசாவை விட்டு டில்லி சென்றது, சரோஜ் மனதில், தாங்க முடியாத வெறுமையை ஏற்படுத்தியது.அவர் இன்றி, தன் வாழ்க்கை நிறைவு பெறாது என உணர்ந்தார், சரோஜ். சில நாட்களுக்கு பின், பிரமோதினிக்கு போன் செய்த சரோஜ், அவரை மணக்க விருப்பம் தெரிவித்தார்.கண் பார்வை இல்லாத நிலையில், சரோஜ் தன்னை மணந்தால், இயல்பான வாழ்க்கை வாழ முடியாது என, தயக்கம் காட்டினார், பிரமோதினி. இருப்பினும், தன் நிலையில் சரோஜ் உறுதியாக இருந்ததால், திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார், பிரமோதினி.நீண்ட சிகிச்சைக்கு பின், தற்போது, அவருக்கு, 20 சதவீத பார்வை கிடைத்துள்ளது.

இந்நிலையில், உ.பி., மாநிலம், லக்னோவில், ஆசிட் வீச்சுக்கு எதிரான பிரசார இயக்கத்தால் நடத்தப்படும், ‘ஷிரோஸ் ஹேங் அவுட் கபே’ என்ற, காபி விற்பனை நிறுவன வளாகத்தில், காதலர் தினமான நேற்று, பிரமோதினிக்கும், சரோஜுக்கும், திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது. அடுத்தாண்டு, அவர்களின் திருமணம் நடக்க உள்ளதாக, நண்பர்கள் தெரிவித்தனர்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

தீபிகா படுகோன் மற்றும் பிரபல நடிகரின் ...
பறக்கும் விமானத்தில் பிரபல இளம் நடிகைக...
சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு கிடைத...
ஐஸ்வர்யா ராயின் மகன் என உரிமை கோரும் இ...
ரஜினியின் அரசியல் அறிவிப்பின் அதிரடி ...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
இந்த பெண்ணை அடையாளம் தெரிகிறதா..!?அன்ற...
மனைவியை பிரிந்து செல்ல கருவாடு கேட்ட ந...
காதலனின் மோசமான செயலால் ப்ளேடால் தன் க...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
மனைவியின் குடும்பத்தர் செய்த செயலால் த...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.8K
  Shares