இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 589
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  969
  Shares

இன்றைய பஞ்சாங்கம் 15-02-2018, மாசி 03, வியாழக்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 02.35 வரை பின்பு வளர்பிறை பிரதமை. திருவோணம் நட்சத்திரம் காலை 07.31 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 0. சர்வ அமாவாசை. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.2/15/2018இன்றைய ராசிபலன்”மேஷம்”

மேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.”ரிஷபம்”

ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.”மிதுனம்”

மிதுனம்: இரவு 8.50 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.”கடகம்”

கடகம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.”சிம்மம்”

சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். அமோகமான நாள். “கன்னி”

கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.”துலாம்”

துலாம்: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியம் முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.”விருச்சிகம்”

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சொந்த-பந்தங்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள்.”தனுசு”

தனுசு: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தோற்ற பொலிவு கூடும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கி கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.”மகரம்”

மகரம்: இரவு 8.50 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உறவினர், நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.”கும்பம்”

கும்பம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்துப் போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரங்களால் சங்கடங்கள் வரும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்யோகத்தில் அதிருப்தி உண்டாகும். போராடி வெல்லும் நாள்.”மீனம்”

மீனம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் மரியாதைக் கூடும். சிறப்பான நாள்.

இதையும் படிக்கலாமே
இலியானா தற்கொலை முயற்சி? காரணம் இது தா...
பிரபல நடிகர் மீது பிரமாண்ட இயக்குனர் ச...
பிரபல நடிகைகளான ரம்பா மற்றும் தேவயானி ...
என்னது சந்தானதுக்கு ஜோடி தீபிகா படுகோன...
மாதவிடாய் காலத்தில் வலியை போக்கும் உணவ...
என் கணவர் இந்த விடயதுக்கு முடியாது என்...
குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பாலை கணவன...
காதலில் விழுந்த பிக் பாஸ் ஜோடி ..! டு...
சினிமா ஸ்டைலில் காதலியின் தந்தையிடம் ச...
கொஞ்சும் குழந்தையாய் நாம் பார்த்த நடிக...
ஈழம் முல்லைத்தீவு பகுதியில் குண்டுவெடி...
மத்திரை சாப்பிட தண்ணீர் கேட்ட பெண்ணுக்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 589
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  969
  Shares