உயிருடன் புதைக்கப்பட்ட 9 வயது சிறுமி ..! பொலீஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 402
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  782
  Shares

பிரேசில்நாட்டில் 3 அடி ஆழத்தில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 9 வயது சிறுமியை பொலிசாரும் பொதுமக்களும் போராடி மீட்டுள்ளனர்.பிரேசிலின் Sao Paulo பகுதியில் சம்பவத்தன்று ராணுவ பொலிசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.அப்போது அவர்களைஅணுகிய ஒரு பெண் நடந்த சம்பவத்தை கூறி உதவிக்கு அழைத்துள்ளார்.சிறுமி ஒருவர் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும், வந்து மீட்க வேண்டும் எனவும் அவர் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இதையடுத்து சம்பவயிடத்துக்கு விரைந்த பொலிசார், அப்பகுதி பொதுமக்களையும் உதவிக்கு அழைத்துள்ளனர்.பின்னர் தங்கள் கைகளாலையே சிறுமி புதைக்கப்பட்டிருந்த பகுதியில்மண்ணை அப்புறப்படுத்தியுள்ளனர்.

எந்திரங்களை பயன்படுத்தினால்அது சிறுமியை காயப்படுத்தலாம் எனவும், உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என கருதியே பொலிசார் தங்கள் கைகளால்மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதனையடுத்து3 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த சிறுமியைஉயிருடன் மீட்டனர். இருப்பினும் அவர் சுவாசம் விட சிரமப்பட்டதாகவும், உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே சிறுமி எவ்வாறு அந்த புதைக்குழியில் சிக்கினார் எனவும், திட்டமிட்டே செய்யப்பட்டதா எனவும் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 402
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  782
  Shares