திருமணம் ஆகாமல் இறந்து போன மகன் பெற்றெடுத்த இரட்டை குழந்தைகள் : மகிழ்ச்சியில் பெற்றோர்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.9K
  Shares

புற்றுநோய் காரணமாக இறந்த மகனின் விந்தணுக்களை பயன்படுத்தி வாடகைத் தாய் மூலம் இரண்டு பேரக் குழந்தைகள் பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.புனேவைச் சேர்ந்தவர் பிரதாமேஷ்(27), இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு மேல்படிப்புக்காக ஜேர்மனி சென்றார்.தொடர்ந்து படித்து வந்த நிலையில், அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பது.இதனால் ஜேர்மனியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார், அப்போது அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிப்பதற்கு முன் விந்து செல்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டன.சிகிச்சைக்கு பின் கண்பார்வை இழந்த பிரதாமேஷ், அதன்பின் இந்தியா வந்தார். தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மகனின் இழப்பை தாங்க முடியாமல் தவித்த பெற்றோர், அவரின் விந்தனுவை வைத்து பேரக் குழந்தைகள் பெற்றெடுக்க முடிவு செய்தனர்.

அதன் படியே ஜேர்மனியில் உள்ள மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு, உரிய விளக்கம் அளித்து விந்தனுவை பெற்றனர்.பின்னர் செயற்கை கருவூட்டலுக்காக புனேயில் உள்ள மருத்துவமனையை அணுகினர். அங்கு, அவரின் விந்து செல்களுடன் தானமான பெற்ற கருமுட்டைகளை சேர்த்து ஆய்வகத்தில் கரு உயிர் வளர்க்கப்பட்டது.இதைத் தொடர்ந்து அவர்களின் உறவினரின் பெண் ஒருவர் கருப்பையில் செலுத்தப்பட்டது. கரு தொடர்ந்து நன்றாக வளர்ந்து வந்த நிலையில், குறித்த பெண்ணிற்கு கடந்த திங்கட்கிழமை இரட்டை குழந்தைகள் பிறந்தன.இதைக் கண்ட பிரதாமேஷின் பெற்றோர் தங்கள் மகன் திரும்பி கிடைத்துவிட்டதாக மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்.

அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.9K
  Shares