ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்…! அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போதைய நிலை …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 667
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  967
  Shares

அமெரிக்காவில் ஒட்டிப்பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் ஏழு மணி நேர ஆப்ரேஷனுக்கு பிறகு வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளனர்.டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த மைக்கேல்- ஜில் ரிச்சர்ட்ஸ் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும்கர்ப்பமடைந்த ஜில்லுக்கு கடந்த 2016 டிசம்பர் 29-ஆம் திகதி இரட்டை பெண் குழந்தைகள் 4.4 கிலோகிராம் எடையில் பிறந்தது.குழந்தைகளின்மார்பு மற்றும் வயிறு பகுதிகள் ஒட்டியிருந்த நிலையில் இதயத்தில் வெளிப்பகுதி, கல்லீரல் போன்ற உறுப்புகளை குழந்தைகள் பகிர்ந்தபடி இருந்தனர்.அண்ணா, ஹோப் ரிச்சர்ட்ஸ் என பெயர் வைக்கப்பட்ட குழந்தைளுக்கு ஆப்ரேஷன் செய்து இருவரையும் பிரிக்க டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனை முடிவு செய்தது.அதன்படி கடந்த மாதம் 13-ஆம் திகதி75 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் ஏழு மணி நேர ஆப்ரேஷனை மேற்கொண்டார்கள்.

ஆப்ரேஷன்முடிவில் அண்ணாவும், ரிச்சர்ட்சும் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் இருவரும் ஒரு மாதத்துக்குள் உடல் நலம் தேறிவீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து ஜில் கூறுகையில், இந்த நாளுக்காக கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் காத்திருந்தோம்.இரண்டு குழந்தைகளையும் தனித்தனி படுக்கையில் பார்ப்பது விவரிக்க முடியாத மகிழ்ச்சியை தருகிறது என கூறியுள்ளார்.மருத்துவர் லாரி ஹொலிர் கூறுகையில், எங்கள் மருத்துவ குழுவினரின் கடும் உழைப்பின் காரணமாகவே இந்த சிக்கலான ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்தது.அண்ணாவும், ரிச்சர்ட்சும் விரைவில்பூரண குணமாவார்கள் என நம்புகிறோம் என கூறியுள்ளார்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 667
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  967
  Shares