தைராய்டு அத்தனை கொடிய நோய் அல்ல ..இதோ நீங்களே இலகுவாக தீர்க்கலாம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 932
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares

நம்முடைய முன்கழுத்தில் மூச்சுக்குழல் பகுதியில் அமைந்துள்ளது தைராய்டு, உடலுக்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்சிதை மாற்றங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
தைராய்டு அதிகம் சுரந்தால் ஹைப்பர் தைராய்டிஸம் என்றும், குறைவாக சுரந்தால் ஹைப்போதைராய்டிஸம் எனவும் குறிப்பிடுகிறார்கள்.
தைராய்டு அதிகம் சுரந்தால் உடல் சோர்வாக இருப்பதுடன் உடல் எடை குறையும், அதுவே குறைவாக சுரந்தால் உடல் எடை அதிகரிக்கும், இதயத்தில் படபடப்பு, எரிச்சல் பதற்றம் உண்டாகும்.
குணப்படுத்தும் வழிமுறைகள்
தைராய்டு காரணமாக கழுத்தில் கழலைக் கட்டி உண்டாகும், அப்படி உருவானால், தும்பை இலைகளை அரைத்துப் பற்றுப் போட்டு வரவேண்டும், இதன் மூலமாக நாளடைவில் கட்டிகள் கரையும்.
அன்றாட சமையலில் இந்துப்பை சேர்த்துக் கொள்வது நன்மை தரும்.
இஞ்சிச்சாறு, பசலைக்கீரைச்சாறு தலா 100 மில்லி எடுத்துக் கலந்து அதில், 100 கிராம் கொள்ளுப்பயறை ஒருநாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர், அதனை வெயிலில் காய வைத்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, சின்ன வெங்காயம் சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடித்து வந்தால் தைராய்டு நோய்கள் குணமாகும்.
’சவ் சவ்’ காயில் தாமிரச் சத்து, மாங்கனீஸ் அதிகம் உள்ளதால், உணவில் அதனை சேர்த்துக் கொண்டால் தைராய்டு கோளாறுகள் நீங்கும்.
துளசி, கண்டங்கத்தரி, தூதுவளை, ஆடாதொடை இலை அனைத்தும் சேர்த்து ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அதிமதுரம், கருஞ்சீரகம், சடாமஞ்சில், வில்வவேர் ஐந்து கிராம் மற்றும் சின்ன வெங்காயம் 4 எடுத்துக் கொண்டு கசாயம் செய்து குடித்து வந்தால் தைராய்டு கோளாறுகள் நீங்கும்.
நெல்லிக்காயை தினமும் காலையில் மென்று சாப்பிட்டு வர, தைராய்டு பிரச்சனைகள் நீங்கும். வெந்நீரில் கல் உப்பு சேர்த்து, தொண்டையில் படும்படி வாய் கொப்பளித்து வர தைராய்டு குணமடையும்.
பசலைக்கீரை போன்ற நீர்ச்சத்துள்ள கீரை வகைகள், முழு தானியங்கள், முளை கட்டிய பயறு வகைகள் மற்றும் பழச்சாறுகள் போன்றவை தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த நிவாரணம் தரும்.
செலினியம் அதிகம் உள்ள உணவுகளான இறைச்சி, மீன், காளான், சோயாபீன்ஸ், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றை தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு உகந்தது.
தைராய்டு பாதிப்பால் குரலில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதிமதுரம், அக்கரா, கரிசலாங்கண்ணி போன்றவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, தினமும் இரண்டு கிராம் வீதம் காலை வேளையில் சாப்பிட்டு வர குரல் மாற்றமடையும்.
தைராய்டு பாதிப்பினால் உடல் எடை குறைந்தவர்கள், தினமும் 20 கிராம் அக்ரூட் பருப்புடன், 40 கிராம் வேர்க்கடலை சேர்த்து அரைத்துக் குடித்து வந்தால் இளைத்த உடல் எடை கூடும்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

தினமும் உடற்பயிற்சி செய்றிங்களா? கொஞ்ச...
ஒரு தேவதையின் திருமணத்தில் கடவுளின் வா...
நயன்தாராவா இப்படி செய்தார்.? திருப்தி...
சூடான தோசை கல்லில் பெண்ணை இருக்க வைத்த...
இப்படி பட்டவரா இவர்? ஆயிரம் ரூபாய் சம்...
நயன்தாரா எழுதிய உருக்கமான கடிதம் கண் க...
பலர் பார்க்க ஒன்றரை வயது குழந்தையை உய...
மனைவியின் உடலுறுப்புகள் 4 தானம் செய்த ...
உன்னை நான் இழந்து விட்டேன்..ஐ லவ் யூ ப...
இலங்கை அகதி ஒருவர் சுவிட்சர்லாந்தில் அ...
காதலர் தினத்தில் உங்கள் காதல் உணர்வு எ...
டீ கடையில் பராட்டா போடும் பிரபல இளம் ந...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 932
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares