மோசமான பழக்கத்தை கைவிட தலையை இரும்பால் மூடிய நபர் – பெருமிதத்தில் குடும்பத்தினர்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 24K
 •  
 •  
 •  
 • 124
 •  
 •  
 •  
 •  
 •  
  24.1K
  Shares

மத்தியக்கிழக்கின்  துருக்கியைச் சேர்ந்த இப்ராஹிம் யூசல் (42) என்பவர் தனது 16 வயதிலிருந்து தினமும் இரண்டு பாக்கெட் சிகரெட்டை பிடித்து வந்துள்ளார். இவரின் தந்தை நுரையீரல் புற்றுநோயால் இறந்ததையடுத்து, சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட முயற்சி செய்துள்ளார்.எத்தனையோ முறை முயன்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட முடியாததால், இப்ராஹீம் மிகுந்த வருத்தமடைந்தார். இந்நிலையில், புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட புது முயற்சியாக சிகரெட்டை உள்ளே நுழைக்க முடியாத அளவிற்கு தலைக்கவசம் ஒன்றை அணிந்துள்ளார். மேலும், அவர் மீண்டும் அந்தத் தலைக்கவசத்தை அகற்றி சிகரெட் பிடிக்கக் கூடாது என்பதற்காக, அதைப் பூட்டி சாவியை தனது மனைவியிடமும் குழந்தைகளிடமும் அளித்துள்ளார். அவர்களும் சாப்பிடும்போது மட்டும் அந்த தலைக்கவசத்திலிருந்து அவரை விடுவிக்கின்றனர்.தன் குடும்பத்தின் நலனுக்காக புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட அவர் மேற்கொள்ளும் முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 24K
 •  
 •  
 •  
 • 124
 •  
 •  
 •  
 •  
 •  
  24.1K
  Shares