3 பெண் குழந்தைகள் 15 வயதில் திருமணம் ..! லட்சுமி ராமகிருஷ்ணண்..! பிள்ளைகளை நீங்களே பாருங்கள் ..👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 587
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  907
  Shares

நடிகையும், இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
அண்மையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார்.
காரணம், ஜி தமிழின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வரும் தனி மனிதனின் பிரச்சினைகளை மேடையில் போட்டு காட்டுவதுதான்.
என்னதான் தடைகள், விமர்சனங்கள் என்று அவரை துரத்தி வந்தாலும்,
பல்வேறு தடைகளையும் தாண்டி இன்று வரையும் குறித்த நிகழ்ச்சியை தொகுத்து சிறப்பாக நடத்தி வருகின்றார்.
எனினும், இந்த நிகழ்ச்சி மூலம் சமூக வலைத்தளங்களில் கலாய்க்கும் பல நிகழ்சிகள் நடத்தப்பட்டமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
இதேவேளை, இவரின் ஆரம்ப வாழ்க்கையை பார்த்தால் பெண்களுக்காக தன் வாழ்வில் அதிக நேரத்தை செலவு செய்துள்ளார் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கடந்த 1970ஆம் ஆண்டு கேரளாவின் பாலக்காட்டில் பிறந்தவர். இவருடைய அப்பா கிருஷ்ணசாமி இந்தியாவின் மிகப்பெரிய நூல் வியாபாரி. லட்சுமிக்கு 15 வயதில் ராமக்கிருஷ்ணனுடன் திருமணம் நடந்தது.
இதனால் வேறு வழியின்று தனது கணவருடன் செல்ல வேண்டியதாயிற்று. அவருடைய கணவர் ராமகிருஷ்ணன் IITல் படித்து வெளிநாடுகளில் வேலை செய்து வந்தார். இதனால் தனது 15 வயதில் இருந்து 35 வயது வரை ஓமன் நாட்டில் தன் கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. 1985ஆம் ஆண்டு 2005ஆம் ஆண்டு வரை ஓமன் நாட்டில் இருந்து பின்னர் 2005ல் இந்தியா வந்தார் லட்சுமி. அதன்பின்னர் தனது மூன்று குழந்தைகளின் கல்விக்காக கணவருடன் கோயமுத்தூர் வந்து விட்டார்.
ஓமன் நாட்டில் இருந்தபோது அந்த நாட்டின் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். அங்குள்ள பெண்களின் திறமையை வளர்க்க ஒரு பவுண்டேசனை துவங்கி அவர்களுக்கு திறமையை வளர்க்கும் பல பயிற்சிகளை கொடுத்து வந்தார். இதனால் ஓமன் நாட்டின் விருதினையும் பெற்றுள்ளார்.
மலையாள திரையுலகின் பிரபல இயக்குனர் லோஹிததாஸ், லட்சுமி ராமகிருஷ்ணன் வீட்டினை தன் படத்திற்கான சூட்டிங்கிற்கும் கேட்டுள்ளனர்.
இதன் மூலம் திரையுலகில் அறிமுகம் கிடைத்த லட்சுமி. 2005ல் இருந்து 6 ஷார்ட் பிலிம்களை இயக்கியுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு யுத்தம் செய் என்ற படத்திலும் நடித்தார். அதன்பின்னர், ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி என மூன்று படங்களை இயக்கினார்.
மேலும், பொய் சொல்லப்போறோம், எல்லாம் அவன் செயல், ஈரம், நாடோடிகள், வேட்டைக்காரன், விண்ணைத்தாண்டி வருவாயா, ஆண்மை தவறேல், ராவணன், நான் மகான் அல்ல, பாஸ் என்கிற பாஸ்கரன், யுத்தம் செய், ரௌத்திரம், லீலை, சென்னையில் ஒரு நாள் என பல தமிழ் படங்களில் நடித்துள்ளமை குறிப்பிட தக்கது ..!
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 587
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  907
  Shares