மாம்பழ சட்னி : பெங்காலி ஸ்பெஷல் ரெசிபி!!

மாம்பழ சட்னி : பெங்காலி ஸ்பெஷல் ரெசிபி!!

மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாராவது இருக்காங்களா? வீட்ல நிறைய மாம்பழங்கள் ஸ்டாக் இருக்கும். எத்தனை சாப்பிட்டாமல் தீராத ஆசை, அலுக்காத சுவை மாம்பழத்திற்கு உண்டு.

சில மாம்பழங்கள் லேசான புளிப்புத் தமையுடன் இருக்கும். அவற்றை சாப்பிடவும் முடியாது என்ன செய்யலாம் என யோசிப்பீர்களா? அப்படியென்றால் வாங்க அதில் பெங்காலி ஸ்பெஷலான மாம்பழ சட்னி செய்யலாம்.

தேவையானவை :

மாம்பழம் – 2

கடுகு – தாளிக்க

வர மிளகாய்-2

வறுத்த சீரகப் பொடி- 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

சர்க்கரை- கால் கப்

நல்லெண்ணெய் – சிறிது

உப்பு – தேவையான அளவு

நீர் – 1 கப்

செய்முறை :

-முதலில் மாம்பழத்தை சிறிய தூண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

-அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெயை சிறிது ஊற்றவும்.

-கடுகு தாளித்து,வரமிளகாயை அதில் சேர்க்கவும்.

-பின் மாம்பழத்துண்டுகளை அவ்ற்றில் சேர்த்து வதக்கி மூடி வைத்திருங்கள்.

-5 நிமிடம் கழித்து மாம்பழம் வெந்து கனிந்திருந்தால் அதனை நன்றாக மசித்து அதில் சீரகப் பொடி, உப்பு மற்றும் சர்க்கரையை சேருங்கள்.

-அவற்றுடன் தேவையான அளவு நீர் சேர்த்து கொஞ்சம் சுண்ட வையுங்கள்.பின் இறக்கி தேவைப்பட்டால் முந்தி திராட்சையுடன் அலங்கரிக்கலாம். *

-இப்போது சுவையான மாம்பழ சட்னி ரெடி. இதனை வடை போண்டா அல்லது தோசைகளுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :

சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்துக் கொண்டால் சுவை இன்னும் கூடுதலாக கிடைக்கும். ருசியும் அபாரமாக இருக்கும்.

Previous 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா, தலையே சுற்றிப்போகும் Black Panther வசூல்
Next சுவையான ரவா இட்லி

You might also like

கிச்சன் கலாட்டா

சுவையான ரவா இட்லி

நீங்கள் தென்னிந்திய உணவுகளின் சுவைக்கு ரசிகர் என்றால், இட்லி, நிச்சயமாக உங்களின் விருப்பத்திற்குரிய உணவாக இருக்கும். நீங்கள் ஒரு ஆரோக்கியமான காலை அல்லது மாலை சிற்றுண்டியை தேடுகின்றீர்கள் எனில் இட்லி உங்களுக்கான உணவு ஆகும். நீங்கள் இட்லி செய்வதற்கு அதிக நேரம்

கிச்சன் கலாட்டா

மினி பிட்சா

இன்றைய குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஒன்றாக பிட்சா உள்ளது. அதற்காக அடிக்கடி பிட்சா கடைக்கு செல்ல முடியாது. ஆனால் வீட்டில் மைக்ரோ ஓவன் இருந்தால், பிட்சாவை வீட்டிலேயே செய்யலாம். மேலும் இந்த பிட்சா செய்வதற்கு எந்த கஷ்டமும் படத் தேவையில்லை.

கிச்சன் கலாட்டா

சாக்லேட் பர்பி

வழக்கமாக நீங்கள் முயற்சி செய்து பார்க்கும் லட்டு, மற்றும் பர்பிக்களை தவிர்த்து புதிதாக சாக்லேட் பர்பியின் செயல்முறையை நாங்கள் உங்களுக்காக வழங்குகின்றோம். இது கண்டிப்பாக உங்கள் உறவினர், மற்றும் குழந்தைகளுக்கு பிடிக்கும். பறிமாறும் அளவு – 4 பேர் தயாரிப்பு நேரம்