இன்றைய நாளும் இன்றைய பலனும் .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 510
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  890
  Shares

இன்றைய பஞ்சாங்கம் 20-02-2018, மாசி 08, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 04.46 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. ரேவதி நட்சத்திரம் பகல் 02.02 வரை பின்பு அசுவினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 1/2. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
2/20/2018
இன்றைய ராசிபலன்
“மேஷம்”
மேஷம்: நண்பகல் 12.25 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வியா பாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத் யோகத்தில் சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். 
“ரிஷபம்”
ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். போராடி வெல்லும் நாள். 
“மிதுனம்”
மிதுனம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். இனிமையான நாள்.
“கடகம்”
கடகம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.
“சிம்மம்”
சிம்மம்:  நண்பகல் 12.25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.
“கன்னி”
கன்னி: நண்பகல் 12.25 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள். 
“துலாம்”
துலாம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள். 
“விருச்சிகம்”
விருச்சிகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
“தனுசு”
தனுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள். 
“மகரம்”
மகரம்:  திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பணப்பற்றாக்குறையை சாமர்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.
“கும்பம்”
கும்பம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
“மீனம்”
மீனம்: நண்பகல் 12.25 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

ப்ளூ வேல் சேலஞ்க் விளையாடும் இளம் வயதி...
ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க நீதிபதி ஆறு...
ஒரு தாயின் கண்ணீர் கடிதம் "எனக்கு...
நடிகர் விமலுக்கும் பிக் பாஸ் ஜூலிக்கும...
உடலுறவுக்கு முன் இந்த உணவுகளை உண்ணவே வ...
விஜய்62 படத்தின் பெயர் இது தான் ..! இண...
ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணதிற்கு சு...
மனைவி மற்றும் மகளை யாழ் வைத்தியசாலியில...
ஆயுள் தண்டனை கைதியுடன் உறவு வைக்க பெண்...
இனிமேல் என்னை யாரும் எங்கும் பார்க்க ம...
செய்வினை சூனியத்தை எலுமிச்சையால் அழிக்...
இலங்கையில் தலைவிரித்தாடும் இனவாத தாக்க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 510
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  890
  Shares