பதவி விலகும் பிரதமர் ரணில் ..! இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பு ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 472
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  852
  Shares

எதிர்வரும் ஒரு மாத கால அவகாசத்தின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியைராஜினாமா செய்து கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளதாககொழும்பு ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
புதியபிரதமர் ஒருவரை நியமித்தல், ஐக்கிய தேசிய கட்சியின் தனி அரசாங்கம் ஒன்றை உருவாக்குதல் போன்ற காரணங்களுக்காகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவுள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் ஆரம்பித்துள்ள செயற்திட்டங்களை வேறு ஒருவருக்கு வழங்கவும், அடுத்த கட்டநடவடிக்கைகளை அதிகாரிகளுக்கு அறிவிக்கவும் இந்த ஒரு மாத கால அவகாசத்தினை ரணில் கோரியுள்ளதாக குறிப்பிடப்படுவதோடு, அதன் பின்னர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக ஜனாதிபதியிடம் பிரதமர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கூட்டத்தின் போது சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்தஅரசாங்கத்தினை தொடருவது தொடர்பாகஒரு மாதத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில்இருந்து நீக்காமல் அவராகவே பதவியில்இருந்து விலகிக் கொள்ளஅவசியமான கால அவகாசத்தை வழங்க வேண்டும் என அண்மையில் ஐக்கிய சேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள்சிலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக் கருத்தானது மீண்டும் தென்னிலங்கை அரசியலில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 472
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  852
  Shares