கட்சி தலைவர் பதவியிலிருந்து ஷெரீப் தகுதி நீக்கம்

கட்சி தலைவர் பதவியிலிருந்து ஷெரீப் தகுதி நீக்கம்

இஸ்லாமாபாத் : ‘அரசியல் சட்டத்தின், 62 மற்றும், 63வது பிரிவின் கீழ், தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர், ஒரு கட்சியின் தலைவராக இருக்க முடியாது’ என, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பாக்,, முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த, நவாஸ் ஷெரீப், ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழலில் சிக்கியதையடுத்து, அவரை பதவி நீக்கம் செய்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம், ௨௦௧௭ல் உத்தரவிட்டது. எனினும், பாகிஸ்தானை ஆளும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக, நவாஸ் ஷெரீப், தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.

இதை எதிர்த்து, பாக்., உச்ச நீதிமன்றத்தில், அவாமி முஸ்லிம் லீக் உட்பட பல கட்சிகள், மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அரசியல் சட்டத்தில், 62 மற்றும், 63வது பிரிவின் கீழ், தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர், ஒரு அரசியல் கட்சியின் தலைவராக பதவி வகிக்க கூடாது’ என, தீர்ப்பளித்தது.

இயைதடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும், நவாஸ் ஷெரீப் நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Previous ராஜமௌலியின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் இவர் தான்
Next துபாய் இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர்களது குறைகளை தீர்க்க உதவும் சிறப்பு நிகழ்ச்சி

About author

You might also like

நிமிடச் செய்திகள்

இலங்கைப் பெண் சவூதி அரேபியாவில் சுட்டுக் கொலை

சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை காலை சவுதி அரேபியாவின் புரைதா என்ற பிரதேசத்தில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 42 வயதான இலங்கைப் பெண் ஒருவரே

நிமிடச் செய்திகள்

தலைவர் பிரபாகரன் இறந்ததாக நடத்தப்பட்ட நாடகம்..! இவரது உடல் தானாம் ..!

தலைவர் இருக்கிறாரா இல்லையா என்று மக்கள் குழம்பி போய் இருக்கும் நிலையில் புது செய்தியாக இப்படி வந்திருப்பது இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது .. இறுதி யுத்தத்தில்இந்திய இராணுவமும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போராடியது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு போர்க்களத்தில் சாவடைந்த புலிகளின் தலைவரின்உடலமைப்பைக்கொண்ட இந்திய

நிமிடச் செய்திகள்

அப்பாவி சிறுவனின் மரணத்தில் கனடாவின் செயல் ..! கனடாவா இப்படி என்ற அதிர்ச்சியில் மக்கள்..!

கனடாவை எல்லாருக்கும் பிடிக்கும் அதற்கு காரணம் பிரதமர் என்று கூட சொல்லலாம்..ஆனால் அந்த நாட்டுல கூட நடுக்கிற இது போன்ற விடயம் நடக்கிறது என்று நினைக்கும் போது கஷ்டமாக தான் இருக்கு .. உலகமக்கள் அனைவரது உள்ளத்தையும் உலுக்கிய சிரியாசிறுவன் அலன்குர்தியின்