யாருடைய கல்லறையை யார் உடைப்பது. .!? லண்டனில் பொங்கியெழுந்த தமிழ் மாணவர்..! யாருடைய கல்லறையை உடைக்க பார்த்தார்கள் தெரியுமா ..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 603
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  983
  Shares

முல்லைப் பெரியாறு அணை கட்டியது பென்னிகுவிக் என நம்அனைவருக்கும் தெரியும்.
தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகி அரபிக் கடலில் கலந்து வீணாகி கொண்டிருந்த தண்ணீரை சேமிக்கும் விதமாக லண்டன் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் கட்டியது தான் முல்லைப்பெரியாறு அணை.
லண்டனில் தனக்காக இருந்த சொத்துகளை விற்று தமிழகத்தின் விவசாயம் செழிக்கவும், தமிழர்களின் வாழ்வு மணக்கவும்அணை கட்டிய அந்த நபரின் கல்லறை லண்டனில் உள்ள புனித பீட்டர்ஸ் தேவாலயவளாகத்தில் உள்ளது.
1911 ஆண்டு உயிரிழந்த பென்னிகுவிக்கின் கல்லறை எழுப்பப்பட்டு100 ஆண்டுகள் கடந்த நிலையில் லண்டன் தேவாலய விதி மற்றும் லண்டன் அரசு உத்தரவுப்படியும் இடிக்க வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை கேட்டு கொதித்தெழுந்த லண்டனில் படித்து வரும் தமிழ் மாணவரான சந்தான பீரொலி என்றஇளைஞர், பென்னிகுவிக்கின் சகோதரி வழி பேத்திமூலம் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு இன்னும்நிலுவையில் உள்ள நிலையில், பென்னிகுவிக் கல்லறைக்கு வரும் பார்வையாளர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதை லண்டன் நீதிமன்றம் உற்று நோக்கி வரும் நிலையில் பென்னிகுவிக்கின் கல்லறையை புணரமைத்துபெரிதாக்க இருப்பதாக தேவாலய இயக்குநர்தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் வலத்தை பெருக்க வழிவகை செய்த பென்னிகுவிக்கின் கல்லறையை புணரமைக்க வேண்டும் என்பது தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 603
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  983
  Shares