“கைகொடுத்து போட்டோவிற்கு போஸ்கொடுக்க நான் இங்கு வரவில்லை” நான் இந்தியா வந்தது இதற்காக தான் . கனடா பிரதமரின் அதிரடி …👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  1.8K
  Shares

தனது ஒருவாரகாலப் பயணம்இந்தியா – கனடா இடையே உறவுகளை மேம்படுத்துவதற்கே தவிர, கைக்குலுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அல்ல என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஒருவாரகால அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு சென்றுள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
தன் குடும்பத்தினருடன் கடந்த சனிக்கிழமை இந்தியாசென்ற அவர், தாஜ்மகால், சபர்மதி ஆசிரமம், மும்பை வர்த்தகக் கூட்டம் என பலவற்றில் கலந்துகொண்டார்.
மும்பை வர்த்தகக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், ‘நான் கைக்குலுக்குவதற்கோ, புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதற்கோ இந்தியா வரவில்லை. மாறாக கனடா – இந்தியா இடையே இருக்கும் உறவை மேம்படுத்துவதற்கும், மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வந்திருக்கிறேன்.
இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மட்டுமின்றி, இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவை, பொருளாதார, கலாச்சார மற்றும் வர்த்தக உறவை மேம்படுத்தும்.
இதை சாத்தியமாக்க நமக்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன’ என தெரிவித்தார்.
மேலும், ‘கனடாவும், இந்தியாவும் உலகின் மிகப்பெரிய இரண்டு ஜனநாயக நாடுகள். இந்தியா மக்கள்தொகையிலும், கனடா மேற்பரப்பு நிலத்திலும் ஜனநாயகத்தைக் கொண்டது. எனவே, நிச்சயமாக நம்மால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.
எனவே, இதை இரண்டு அரசுகளுக்கு இடையிலான உறவு என்பதைவிட இருநாட்டு மக்களுக்கான உறவு என்றே நான் சொல்வேன்’ எனவும் கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி எனக்கு இந்திய கலாச்சாரம் பிடிக்கும்
இந்திய கலாச்சாரத்தை தன் குழந்தைகளுக்கு கற்றுத் தருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஒரு வார கால அரசுமுறை சுற்றுப் பயணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ளார்.
தன் சுற்றுப் பயணத்தை தாஜ்மஹாலில் இருந்து தொடங்கிய அவர், இந்தியாவின் பலமுக்கிய சுற்றுலா தளங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார்.
இதேபோல், பலமுக்கிய வர்த்தக பிரமுகர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், ஆமிர்கான் உள்ளிட்டோர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், “இந்தச் சுற்றுப்பயணத்தின் மூலம் என் குழந்தைகளுக்கு நான் காட்ட விரும்பிய விஷயங்களில் ஒன்று, இந்தியாவின்பன்முகத்தன்மை.
இங்கே மசூதிக்குச் செல்ல முடியும் அதே வேளையில் கோயிலுக்கும் செல்ல முடிகிறது. இது இந்தியாவின்சிறப்புக்குரிய பன்முகத்தன்மையைக் காட்டுகிறது. இதை என் குழந்தைகளுக்கு கற்றுத் தருவது மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது” என கூறியுள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

பிரபல நடிகர் மீது பிரமாண்ட இயக்குனர் ச...
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக...
மறந்தும் கூட இந்த பொருட்களை தொட்டு விட...
மரணத்தின் வாயில் இருந்த சிறுவனுக்கு நட...
அஜித் படங்களில் நடிக்க மாட்டேன் ..! நட...
புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று தெ...
நடிகர் விக்ரமின் வீட்டில் மரணம்...அதிர...
மனைவியை நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து...
அத்தனை சொத்துகளையும் தானம் செய்துவிட்ட...
கடவுளின் சுவாசத்தால் மரணமாகும் தலம் .....
என் மார்பகத்தை பார்க்காதீர்கள் மனதில் ...
2017 இந்திய பணக்கார 100 பிரபலங்கள் ப...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  1.8K
  Shares