மாம்பழ லட்டு ரெஸிபி!!

மாம்பழ லட்டு ரெஸிபி!!

மாம்பழம் மட்டுமல்ல மாங்காயை வைத்து கூட நிறைய சமையல் செய்யலாம். மாங்காயை வைத்து பொதுவாக அனைவரும் ஊறுகாய் தான் செய்வார்கள். ஆனால், மாம்பழத்தை வைத்து நிறைய இனிப்புகள் மற்றும் ஜூஸ்கள் செய்யலாம். மாம்பழத்தை வைத்து பொதுவாக லஸ்ஸி மற்றும் ஷேக் செய்வார்கள்.

நீங்கள் மாம்பழ லட்டு சாப்பிட்டதுண்டா? இது தனி சுவை கொண்ட இனிப்பு வகையாகும். இதில் தேங்காய் மற்றும் மாம்பழ உள்ளதால் சுவை பிரமாதமாக இருக்கும். வாருங்கள் இப்போது நாம் மாம்பழ லட்டு செய்வதற்கு தேவையானப் பொருட்களைப் பற்றியும் செய்யும் பற்றியும் விரிவாக பார்ப்போம்…

தேவையானப் பொருட்கள்

மாம்பழ கூழ் – 1/2 கப்

சுண்டக் காய்ச்சிய பால் – 1/2 கப்

தேங்காய் பவுடர் – 1 கப்

ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

நட்ஸ் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

ஸ்டெப்-1

இந்த ரெசிபியை செய்ய அடி கனமாக உள்ள பாத்திரத்தை உபயோகப்படுவது சிறந்தது. அடுப்பில் அந்தப் பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் பவுடரை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். அத்துடன் மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

ஸ்டெப்–2

இந்தக் கலவையுடன் சுண்டக் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும்படி கலக்க வேண்டும். நல்ல பதத்தில் அதாவது சிறிது கெட்டியாக லட்டு பிடிக்க ஏதுவான நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

ஸ்டெப்-3

இறக்கி வைத்த இந்தக் கலவை ஆறிய பின் சிறிது சிறிது உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தட்டில் சிறிது தேங்காய் பவுடரை தூவிக் கொள்ளுங்கள். அந்த பவுடர் மீது செய்து வைத்த உருண்டைகளை உருட்டி எடுத்தால் சுவையான மாம்பழ லட்டு ரெடி…

 

Previous நீண்ட நாட்கள் உங்க இளமையைத் தக்க வைக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக் போடுங்க...
Next சாக்லேட் பர்பி

You might also like

கிச்சன் கலாட்டா

சாக்லேட் பர்பி

வழக்கமாக நீங்கள் முயற்சி செய்து பார்க்கும் லட்டு, மற்றும் பர்பிக்களை தவிர்த்து புதிதாக சாக்லேட் பர்பியின் செயல்முறையை நாங்கள் உங்களுக்காக வழங்குகின்றோம். இது கண்டிப்பாக உங்கள் உறவினர், மற்றும் குழந்தைகளுக்கு பிடிக்கும். பறிமாறும் அளவு – 4 பேர் தயாரிப்பு நேரம்

கிச்சன் கலாட்டா

மினி பிட்சா

இன்றைய குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஒன்றாக பிட்சா உள்ளது. அதற்காக அடிக்கடி பிட்சா கடைக்கு செல்ல முடியாது. ஆனால் வீட்டில் மைக்ரோ ஓவன் இருந்தால், பிட்சாவை வீட்டிலேயே செய்யலாம். மேலும் இந்த பிட்சா செய்வதற்கு எந்த கஷ்டமும் படத் தேவையில்லை.

கிச்சன் கலாட்டா

சாதம் மீதி இருக்கா? சூப்பரா கட்லெட் செய்யலாம்! வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

நீங்கள் எதிர்பார்த்த மழைக் காலம் வந்து விட்டது. கொஞ்சம் யோசித்து பாருங்க கொட்டும் மழையில் ஜில்லென்ற காற்றில் கையில் சூடான காபியுடன் காரசாரமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே மழையை ரசித்தால் எப்படி இருக்கும். என்னங்க இந்த மழைக்காலத்தில் உங்கள் நண்பர்களுக்காக வீட்டில்