திட்டம் தீட்டித் தான் அப்படி செய்தேன் …! ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் பேட்டி ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares

ஸ்ரீதேவியை பார்க்க பார்க்க ஆசையாக இருந்தது. அதனால், திட்டம் போட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டேன் என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையை தன்னுடைய நடிப்புத் திறமையாலும், அழகாலும் கவர்ந்திழுத்தவர் நடிகை ஸ்ரீதேவி. சிவகாசியில் பிறந்த இவர், தன்னுடைய 4வது வயதிலேயே நடிப்பில் இறங்கியுள்ளார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளாம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது, பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா டுடே சார்பில் நடந்த பெண்கள் உச்சி மாநாட்டில் நடிகை ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும் கலந்து கொண்டார். அப்போது, போனி கபூரிடம் நீங்கள் எப்படி ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பாக, அவர் கூறுகையில், 1970ல் ஸ்ரீதேவி நடித்த ஒரு தமிழ் படத்தை திரையில் பார்த்தேன். அப்போதே, அவர் மீது எனக்கு ஒரு இனம் புரியாத தாக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு அவரை என்னுடைய படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். அப்போது, ரிஷி கபூர் படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தோம். அந்தப் படத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து அவரை சந்திக்க சென்னை சென்றேன். ஆனால், அவர் சிங்கப்பூரில் இருந்தார். அதன் பிறகு ஷேகர் இயக்கத்தில் மிஸ்டர் இந்தியா படத்தில் ஸ்ரீதேவி நடிக்க ஒப்பந்தம் ஆனார். அப்போது, அவர் வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் ரூ.8 லட்சம்.
அப்போது நான் திட்டம் ஒன்று தீட்டினேன் எப்படியாவது மனைவியாக்க வேண்டும் என்று .
என்னுடைய படத்தில் நடிக்க ஸ்ரீதேவியின் அம்மா ரூ.10 லட்சம் கேட்டார். நான், அவர் மீது கொண்ட காதலால், ரூ.11 லட்சம் கொடுத்து, அவரது அம்மாவை என் பக்கம் இழுத்தேன். படப்பிடிப்பின் போது அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொண்டு அவரையும் என் பக்கம் இழுக்க ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் கபூரின் மனைவி மோனாவிடம் சொல்லிவிட்டு ஸ்ரீதேவிக்கு எங்கெல்லாம் படப்பிடிப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று, அவரை நெருங்கினேன். எப்படி உண்மையாக இருக்கிறேன் என்று உணர்ந்த ஸ்ரீதேவிக்கு இப்போது நான் கணவராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.-
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares