பற்கள் ஆடிய உடன் அவற்றை பிடுங்கிவிட வேண்டுமா ? நீங்கள் அப்படி தான் செய்தீர்களா..? இனி அப்படி செய்யாதீர்கள் ஆடும் பற்களை பாதுகாக்கலாம் ..!👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 523
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  903
  Shares

உங்கள் ஈறுகளை வலுவாக்கினால் ஆடும் பல்லைக் கூட நிறுத்த முடியும்.பற்கள் ஆடினா உடனே அவற்றை பிடுங்கத்தான் வேண்டுமா அல்லது அவை விழும் வரை காத்திருக்கனுமா? தேவையில்லை. உங்கள் ஈறுகளை வலுவாக்கினால் ஆடும் பல்லைக் கூட நிறுத்த முடியும். அனுபவப் பூர்வமாக சிலரருக்கு நடந்துள்ளதால் உங்களுக்காக இந்த குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

பல் ஆடுவதற்கு என்ன காரணம் ?
உங்கள் பல் ஆடுவதற்கு பலவீனமான ஈறு மற்றும் பற்கள் காரணம். மோசமான பராமரிப்பு மிக முக்கிய காரணம். பற்சொத்தை ஏற்படுவதாலும் பற்கள் ஆடத் தொடங்கும். . எனவே ஆடும் சமயத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் மீது கவனம் செலுத்தினால் பற்கள் ஆடாமல் மேலும் வலுவாக்க முடியும். அப்படியான குறிப்புகளை பார்க்கலாம்.
தேவையானவை :
நல்லெண்ணெய் – கால் கப்
நெல்லிக்காய் பொடி – கால் கப்
மஞ்சள்- 1 ஸ்பூன்
பட்டைப் பொடி – கால் ஸ்பூன்
கிராம்புப் பொடி – அரை ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்.
தயாரிக்கும் முறை :
மேற்சொன்ன பொடிகளை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதுதான் மூலிகைப் பொடி. மஞ்சள், பட்டை, கிராம்பு, கல் உப்பு போன்றவற்றையும் ஒன்றாக கலந்து பொடி செய்து கொள்ளலாம். அல்லது நேரடியாக பொடியாகவும் வாங்கிக் கொள்ளலாம். நல்லெண்ணெய் லேசாக சூடுபடுத்திக் கொண்டு அதில் இந்த பொடிகளை கலக்க வேண்டும்.

இந்த எண்ணெயால் தினமும் காலையில் ஆயில் புல்லிங்க் செய்ய வேண்டும். இந்த எண்ணெய் எல்லா பற்களிலும் படும்படி 20 நிமிடங்கள் வாயிலேயே வைத்து இருக்க வேண்டும். பின்னர் உமிழ்ந்து விடுங்கள். இப்படி தினமும் ஆயில் புல்லிங்க் செய்வதால் உங்கள் ஈறு பலம்பெற்று நன்றாக வலுப்பெறும். ஆடிய பற்களும் நின்று போய் விடும்.
நெல்லிக்காய் ஈறுகளில் உள்ள நரம்புகளை பலப்படுத்துகிறது. உப்பு கிருமி நாசினி மற்றும் அங்கிருக்கும் தொற்றுக்கலை நீக்குகிறது. நல்லெண்ணெய் பற்களின் நடுவே ஊடுருவி ஈறுகளை பலப்படுத்தும். பட்டை கிராம்பு, பற்களை சிதைவிலிருந்து பாதுகாக்கும்.
இந்த மூலிகைப் பொடி சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும் இல்லையென்றாலும், மூலிகைப் பொடி நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.
தேவையானவை:
படிகார உப்பு – 6 ஸ்பூன்
மிளகு -1ஸ்பூன்
சாம்பிராணி – 1 ஸ்பூன்
இந்துப்பு – 1 ஸ்பூன்
கிராம்பு – 2.5 ஸ்பூன்
ஓமம் – அரை ஸ்பூன்
வேப்பம்பட்டை – 10 ஸ்பூன்
மேற்கண்ட பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை தினமும் பல் துலக்கப் பயன்படுத்தலாம். இவை பல்வலி, பல் கூச்சம், வாய் துர்நாற்றம், பல் நோய்கள், பல் ஆடும் பிரச்னை, பலவீனமான ஈறுகள் ஆகிய பிரச்னைகளைத் தீர்க்கும்.
பூண்டை நசுக்கி சாறு எடுத்து சிறிது தேங்காய் எண்ணெயுடன் கலந்து பற்களில் தேயுங்கள். லேசாக மசாஜ் செய்து பின்னர் பற்களை கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் பாதிக்கப்பட்ட ஈறுகள் குணமாகும்.
பூண்டு சிறந்த ஒரு கிருமி நாசினியாகும். உங்கள் பல் தொற்றினால் பாதிப்படைந்திருந்தால் நல்ல பலனைத் தரக் கூடியது. ஆடும் பற்களுக்கு சிறந்த மருந்தாகும்.
உங்களுக்கு கிருமித் தொற்றோ, பற்சிதைவோ, அல்லது ஈறு பாதிப்போ இல்லாமல் பற்கள் ஆடினால், அது உங்களின் கால்சியம் பற்றாக்குறையினால் எற்பட்டிருக்கலாம். ஆகவே கால்சியம் மாத்திரையும், விட்டமின் டி 3 யும் எடுத்துக் கொண்டால் பற்கள் மீண்டும் பலமாகும். ஆடுவது நிற்கும்.
ஆலமரத்தின் குச்சியை உடைத்து அதனைப் பற்களில் தேய்த்துவந்தால் பற்கள் உறுதி பெறும். மேலும், ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
இன்றும் கிராமங்களில் வேப்பங்குச்சியால் பற்களை விலக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் பற்கள் உறுதியாகின்றன. அதற்குக் காரணம், வேப்பங்குச்சியில் எண்ணற்ற ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிபயாடிக் பொருட்கள் இருப்பதுதான். வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக, பளிச்சென்று இருக்கும். துர்நாற்றம் நீங்கும்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

அதிகமாக பகிருங்கள்.தைராய்டு பிரச்சனைக்...
பல்வலி உயிர்போகிறதா.? எதுவும் வேண்டாம்...
என்னது சந்தானதுக்கு ஜோடி தீபிகா படுகோன...
இத்தனை நோய்களும் பயந்து ஓடும், இந்த மீ...
இரு இளம் மனைவிகளையும் ஒரே நேரத்தில் தீ...
கணவனின் கண்முன்னே மனைவி-க்கு நடந்த பால...
கவர்ச்சியை கொட்டி புத்தாண்டு கொண்டாடிய...
காதலியின் தலையை இரண்டாக துண்டித்த காதல...
பலர் பார்க்க ஒன்றரை வயது குழந்தையை உய...
போலீஸ் அதிகாரியை செருப்பால் அடித்த தாய...
ஜெனீவாவில் தமிழர்களின் மாபெரும் போராட...
தன் பெண் பிள்ளைகள் மூவரை கெளரவ கொலை செ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 523
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  903
  Shares