ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழி இன்றி குப்பை தொட்டியில் எச்சில் உணவு உண்ட பெண்..! இன்று 1800 கோடிக்கு சொந்தக்காரி…!👇முயற்சியா அதிஷ்டமா நீங்களே பாருங்கள் .👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 398
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  778
  Shares

வெற்றிபெற திறமை மட்டுமே போதுமானதல்ல எத்தனைமுறை நாம் தோல்வி கண்டாலும், வெற்றிபெற வேண்டும் என்ற ஒருவனது விடா முயற்சியே அவனுக்கு வெற்றியை தேடித் தரும் என்பதற்கு உதாரணம் தான் Sophia Amoruso என்ற பெண்
அமெரிக்காவை சேர்ந்தவரான Sophia Amoruso தனது 9 வயதிலேயே வாழ்க்கை தரும் துன்பங்களை எதிர்கொள்ள தயாராகி விட்டார்.
ஆரம்பத்தில் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து சாப்பிடக் கூட பணம் இல்லாமல் குப்பைத்தொட்டியில் வீணாக இருப்பதை எடுத்து சாப்பிட்டு வளர்ந்தவர் இன்று 1800 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தின் தலைவராக உருவாகியுள்ளார்.
மோசமான குழந்தைப் பருவம்
1984ம் ஆண்டு கலிபோர்னியாவில் Sophia Amoruso பிறந்தார், இவருக்கு கவனக்குறைவு மற்றும் மனச்சோர்வு இருந்ததால் பள்ளியில் இருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டார். அந்நேரம் அவரது தாய், தந்தை இருவரும் வேலையின்றி இருந்ததால் நிலைமை மோசமானது.
பிழைப்புக்காக தனது 9 வயதிலேயே கடை ஒன்றை திறந்த Sophia, அவரது 22வது வயதுக்குள் 10 வெவ்வேறு வேலைகளைகளுக்கு மாறிவிட்டார்.
டிஜிட்டல் பக்கம் திரும்பிய பார்வை
இளம் வயதில் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த Sophia அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் சுற்றித் திறிந்தார். வாய்ப்பு ஏதும் இல்லாமல் 2003ம் ஆண்டு ஒருமுறை திருடியதால் Sophiaவைக் கைது செய்து அபராதம் விதித்தனர்.
அனைத்து சோதனைகளையும் கடந்து, வாழ்வில் முன்னேற ஏதேனும் ஒரு வழியை தேடியவாறு இருந்தார்.
அப்போது டிஜிட்டல் முறை அறிமுகமாகி அமெரிக்காவில் பிரபலமாகி வந்த ebay-யில் கடை ஒன்றை தொடங்கினார், அதற்கு Nasty Gal எனவும் பெயரிட்டார்.
வெளியில் $8 ஆடைகளை வாங்கி அவற்றை தனது ஆன்லைன் கடையில் $1000 வரை விற்பனை செய்தார். அந்த ஆடைகளை தானே அணிந்து விதவிதமாக போட்டோ எடுத்து அதை அழகாக தனது இணையதள பக்கத்தில் பதிவேற்றுதல் என அனைத்து வேலைகளையும் Sophia தானே செய்தார்.
Nasty Gal விரைவில் தனக்கென ஒரு செல்வாக்கை மக்கள் மத்தியில் பெற்றுவிட்டது. இளம்பெண்களுக்கு தேவையான விண்டேஜ் ஆடைகள் பிரபலமடைந்தன. சமூக வளைதளங்களின் மூலமும் Sophia தனது Nasty Gal நிறுவனத்தை மக்கள் மத்தியில் அதிகளவு கொண்டு சேர்த்தார்.
ஆனால் ebay, Sophia தனது Nasty Gal இணைய பக்கத்தை அதிகமாக விளம்பரப்படுத்துகிறார் என்று 2008ம் ஆண்டு தடை விதித்துவிட்டது, இதனால் 5 வருட கடின உழைப்பு வீணாகியது.
புகழ்பெற்ற Nasty Gal
ஆனால் மனம் தளராத Sophia, ebay விட்டு வெளியேறி தனது ஊழியர்களின் துணையுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் சொந்தமாக சில்லறை விற்பனை துணிக்கடையை தொடங்கினார்.
ஏற்கனவே Nasty Gal இணையத்தில் பிரபலமாகி இருந்ததால், விரைவிலேயே அதிகளவு முதலீட்டாளர்கள் Sophia நிறுவனத்தில் $49 மில்லியன் டொலர் தொகையை முதலீடு செய்தனர்.
அதை வெற்றிகரமாக $280 மில்லியன் டொலராக உயர்த்திக்காட்டி 2012ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழின் அமெரிக்க மகளிர் பணக்காரர்கள் பட்டியலில் 1800 கோடி மதிப்பு சொத்துடன் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
தொழிலை மட்டுமே கவனிக்காமல் பெண்களின் முன்னேற்றத்திற்கும், அவர்கள் தொழில் தொடங்கும் போது வரும் சவால்களை எதிர்கொள்ளவும் உதவிபுரிந்து வருகிறார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 398
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  778
  Shares