கணனி இன்றி கரும்பலகையில் கணனி கற்கும் மாணவர்கள்
March 3, 2018 117 Views

கணனி இன்றி கரும்பலகையில் கணனி கற்கும் மாணவர்கள்

கானாவில் – வறுமையின் மத்தியிலும் கணினிக் கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் தொடர்பிலான புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றன.

கானாவின் – செக்கிடோமஸ் பெட்னிஸ் ஜூனியர் பாடசாலையில் தகவல் தொழில்நுட்பக் கற்கை நெறி ஆசிரியராகக் கடமை புரிகிறார் 33 வயதான ரிச்சட் அப்பயா அகடோ.

இந்த பாடசாலையில் கணனி இல்லாத போதும், பாடசாலையில் இருந்து பெருமளவிலான மாணவர்கள் தேசிய தகவல் தொழில்நுட்ப பாடநெறிக்கு தோற்றி வருகின்றனர்.

கணினிசார் கற்கை நெறியை கரும்பலகையில் தத்ரூபமாக வரைந்து மாணவர்களுக்கு கற்பித்து வந்துள்ளார் ரிச்சட் அப்பயா அகடோ .

இது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியமையைத் தொடர்ந்து, மைக்ரோசொப்ட் நிறுவனம் குறித்த பாடசாலைக்கு கணினிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளதுடன், ரிச்சட் அப்பயா அகடோவிற்கு மடிக்கணினியையும் வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எனினும், தனக்கு மடிக்கணினி வழங்குவதற்குப் பதிலாக மாணவர்களுக்கான கணினியை வழங்குமாறு ரிச்சட் அப்பயா அகடோ கேட்டுக்கொண்டுள்ளார்

Previous பர்கினோ பாசோவில் பிரான்ஸ் தூதரகத்தை இலக்கு வைத்து தாக்குதல்
Next மோடியை எதிர்க்கின்றதா காலா

You might also like

டீக்கடை டிப்ஸ்

ஆட்சியை கவிழ்க்கும் ஒரு முகநூல் பதிவு

நோர்வேயில் ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் முகநூலில் இட்ட பதிவு ஆட்சியே கவிழும் அளவிற்கு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. நோர்வேயில் பிரதமர் எர்னா சொல்பெர்க் தலைமையில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஆட்சி செய்து வருகின்றது. இந்த அரசாங்கம் பெரும்பான்மை பலமற்ற நிலையில் காணப்படுகின்றது.

டீக்கடை டிப்ஸ்

ஆண்மையை பெருக்க இதை மட்டும் குடியுங்கள் ..!

ஆண்மை அதிகரிக்க ஆண்கள் எவ்வளவோ செய்வார்கள் . அதிலும் இளைஞர்கள் என்ன வேண்டுமுமானாலும் செய்வார்கள் . இந்த காலத்தில் உணவு பழக்க வழக்கங்கள் தான் ஆண்மை குறைப்பாட்டுக்கு காரணம். அந்த வகையில் இதையும் பார்க்கலாம் ..! பசும் பால், எருமை பால்

டீக்கடை டிப்ஸ்

பழங்களை தோலுடன் சாப்பிடுபவரா நீங்கள்..!? அப்படியானால் கண்டிப்பாக இதை படியுங்கள்..!

பொதுவாக பழங்கள் சாப்பிட பிடிக்கும். எல்லா பழங்களுமே ஏதாவது ஒரு வகையில் பலன் உள்ளதும் பயனானதும் தான் . ஆனால் அந்த பழங்களை நாம் எப்படி உண்ணுகிறோம் என்ற முறையில் தான் அதன் பயன் முழுமையாக எமக்கு கிடைக்கும் அப்படி கிடைக்கும்