மகன் செய்த செயலால் எலும்புகூடான தாய் …! அதிர வைக்கும் உண்மை காரணம் ..💜👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 437
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  817
  Shares

மும்பையின் சிக்கலானஇடங்களில் ஒன்று அந்தேரி லோக்கண்ட் வாலா கொம்ளெக்ஸ். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியிலிருக்கும்வீடு ஒன்றின் கதவு அழைப்பு மணி தொடர்ந்து பலமுறை அடிக்கப்பட்டும் திறக்கப்படவில்லை.
வேறு வழியின்றி அழைப்புமணியை அடித்தவர், சாவி தயாரிப்பவரை அழைத்துவந்து புது சாவியை தயாரித்து கதவை திறக்கிறார். அப்படி திறந்த கதவு பலவிடயங்களை நமக்கு சொல்கிறது. இவ்வாறான சம்பவங்கள் கடந்த வருடங்களில் இந்தியாவை உலுக்கியதுயாவரும் அறிந்தது. ஆனால் இந்த வாழ்க்கை முறை இன்று தமிழர்களின் தாயக நிலப் பரப்பையும் சூழ்ந்துள்ளதையாவரும் அறிந்தது. தாய் தந்தைபராமரிப்பு இல்லங்களில் பிள்ளைகள் வெளிநாடுகளில்இப்படியான நிலை தொடர்கிறது.
மாற்று சாவி போட்டுகதவை திறந்து, இந்த சமூகத்துக்கு அந்த மோசமான செய்தியை கடத்த காரணமானவரின் பெயர் ரித்துராஜ். அமெரிக்காவில் மனைவியுடன் வசித்துவரும் அவர் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.
அவர் கதவை திறந்தபோது, வரவேற்புஅறையில் இருந்த சோபாவில் ஒரு எலும்புக்கூடு வரவேற்றது. அந்த எலும்புக்கூடு வேறு யாருடையதும் அல்ல. அமெரிக்காவில் பிஸியாக இருந்துவிட்டு மும்பை வந்த ரித்து ராஜின் தாய் ஆஷா.
அவரே எலும்புக்கூடாக அமர்ந்திருந்தார். சேலை மடிப்புகூட கலையாமல் உடல் மொத்தமாக மாயமாகி வெறும் எழும்புக்கூடாக இருந்த அம்மாவிடம், ரித்துராஜ் கடைசியாக பேசியது ஏப்ரல்2016 இல்.
அப்போது அந்த பரிதாபமான தாய் தன் மகனிடம் “தனியா இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. தன்னை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுமாறு” சொல்லியிருக்கிறார்.
அதைக்கூடசெய்ய முடியாதளவுக்கு இயந்திர வாழ்க்கையில் இருந்த மகன், அம்மாவின் எலும்புக்கூட்டை அள்ளிச்செல்லவந்திருக்கிறார்.
இந்த செய்தியை என்னால் கடந்துபோகவே முடியவில்லை. பூட்டிய வீட்டுக்குள் உயிர் பிரிந்த அந்த நொடியில் அந்த அம்மாவின் மனம் என்ன நினைத்திருக்கும் என்பதை நினைக்க நினைக்க மனம் மிகவும் வேதனைக்குள்ளானது.
எவ்வளவு மோசமான தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது. ஓராண்டுகளாக அம்மாவின் நினைவு இல்லாமல் ஒரு மகனால் எப்படிஇருக்க முடியும்.
தாயிடம் நலம் விசாரிக்க ஒரு பத்து நொடி ஆகுமா? அதற்கு கூட நேரமில்லாமல் வெளிநாட்டில் வாழ்ந்து, பணம் சம்பாதித்து சாதித்து என்ன? இவையெல்லாம் யாருக்காக?
மகன் தான் இப்படி இருந்தார் என்றால், பக்கத்து வீட்டில் இருந்தவர்களுக்கோ, ஆளை பார்க்க முடியவில்லையே என்று ஒரு வார்த்தை விசாரிக்க கூட நேரமில்லை.
எல்லோரும் இயந்திரமாகிவிட்டார்கள். ஆகா நம்மைச்சுற்றிஇப்படியானவர்களை தான் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கை குறித்த எந்த புரிதலையும் குழந்தைகளுக்கு உருவாக்காமல் சிறுவயதிலிருந்தே ஐ.டி படிப்பு என்றும், பணம் சம்பாதிப்பது மட்டுமே வெற்றி என்றும் இயந்திரங்களாக குழந்தைகளை உருவாக்கும் பெற்றோர்களின் நிலை இதுவாகதான் இருக்கிறது.
இது ஒரு அம்மா, மகன் கதை அல்ல. இந்தியாவின் பெரு நகரங்களில்வாழும் வயதான பெற்றோர்கள் பலரதுநிலை இதுதான். இந்த நிலை படிப்படியாக யாழ்ப்பாணத்திலும் அதிகரித்து வருவதை காண முடிகின்றது.
வெளிநாடுளில் வாழும் ஈழத்து உறவுகள் வடக்கின் உறவுகளுடனான தொடர்புகள் அருகி வருகின்றன. ஒவ்வொரு முதியோர் இல்லத்திலும் உறவுகளற்ற தெய்வங்கள் காத்திருக்கின்றனர் தங்கள் பிள்ளைகளுக்காக.
பெருகிவரும்முதியோர் இல்லங்கள் என்பது வளர்ச்சி அல்ல. எமது சமூகத்தின் அவமான சின்னங்கள். இல்லை மனித சமூகத்தின் வெட்கக் கேடுகள்என்றே சொல்ல வேண்டும்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

Julie got Beaten in a public place
அதிர்ச்சியில் உறைய வைத்த உண்மை சம்பவம்...
பெண் உருவத்தில் வாழும் பேய்.நான்கு வயத...
இந்த வார்த்தைகளை மட்டும் google ல் தேட...
சாம்பார் பிரியரா நீங்கள்.?இதோ ஆபத்து உ...
நடிகையின் கன்னத்தில் பளார் என அறைந்த இ...
‘‘என் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவிப்...
உள்ளாடை தெரிய குத்தாட்டம் போட்ட விஜய் ...
பிரியாணி பிரியர்களே எச்சரிக்கை .பரவும்...
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி மர்மமான ம...
நான் இறக்கப் போகிறேன் என் மரணத்தின் பி...
இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் அதிர...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 437
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  817
  Shares