திருப்பாச்சி திரைப்பட பாணியில் இலங்கையில் நடந்த சம்பவம் ..👇👇 காதலுக்காக இப்படி கூட செய்வார்களா …👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 374
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  754
  Shares

திருப்பாச்சிதிரைப்படப் பாணியில் இலங்கையில் தனது காதல் தொடர்பு முறிய காரணமாக இருந்த பெண் என நினைத்து வேறு பெண்ணின் முடியை வெட்டிய சுவாரஷ்ய சம்பவம் ஒன்று பயாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
19 வயதுடைய இளைஞர் ஒருவர் பேருந்துக்குள் சென்று 19 அங்குலம்வரை பெண்ணின் முடியை வெட்டியுள்ளார்.
தனது காதலி கூறிய உருவத்தை போன்ற உருவம் கொண்ட வேறு பெண் ஒருவரே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
எனினும் இவ்வாறு முடி வெட்டப்பட்ட பெண் தனது காதலி கூறிய பெண் அல்ல என பின்னரே அவர் அறிந்து கொண்டுள்ளார். நேற்றுமுன் தினம் 12.30 மணியளவில் பயாகலபிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும் முடியைவெட்டிய இளைஞனை பயாகல பொலிஸார்கைது செய்துள்ளனர். 21 வயதான பெண்ணின்தலை முடியை வெட்டிய இளைஞன் தப்பிஓடுவதாக பேருந்து சாரதி பயாகலபொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரியிடம் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பிரதேச மக்களின் ஆதரவுடன் சந்தேக நபரை கைது செய்துள்ள நிலையில் அவரது சட்டை பையில் இருந்து தலைமுடி மற்றும் கத்தரிக்கோலினை பொலிஸார்மீட்டுள்ளனர்.
குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்பலபிட்டிய பிரதேசத்தின்பிரதான பாடசாலை ஒன்றில் தான் கல்வி கற்பதாகவும் தான் பாடசாலை மாணவி ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்திகொண்டதாகவும் தமதுகாதல் தொடர்பு குறித்து காதலியின் தாயாரிடம் பெண் ஒருவர் தகவல்வெளியிட்டதாகவும் இதனால் தமது காதல் முறிவுக்குவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தாயாரிடம் தகவல் வெளியிட்ட பெண்ணின்அடையாளங்களை தனது காதலி கூறியதாகவும் அவரை தான் இதற்கு முன்னர் பார்த்ததில்லைஎனவும் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று மொரட்டுவைக்கு சென்று திரும்பி வரும் போது காதலி கூறிய உருவம் கொண்ட பெண்ணை கண்டதாகவும் அவரை பழிவாங்குவதற்காக அந்த இடத்திலேயே கத்தரிக்கோல்ஒன்றை கொள்வனவு செய்து கொண்டு அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகவும்அவர் தெரிவித்துள்ளார் அதன் பின்னர் எல்பிட்டிய நோக்கி சென்ற பேருந்தில் அவரது முடியைவெட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தனது காதலி கூறிய பெண்ணின் முடியை வெட்டமால் வேறு பெண்ணின்முடியை வெட்டியதாகவும் இளைஞன் தெரிவித்துள்ளார். இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

Neelam Tamil Movie
நடிகை கீர்த்தி சுரேஷிற்கு நிகழ்ந்த பேர...
கவிஞர் சினேகனுக்கு திருமணம் . பிக் பாஸ...
இலங்கையர்கள் அகதி அந்தஸ்து கோர முடியாத...
தில் இருக்கிற ஆண் பெண்களா நீங்கள்? உ...
படுத்ததுமே உறங்க வேண்டுமா .? இதோ எளிய ...
சேலை கட்டும் போது இதை கவனிக்கிறீர்களா....
பச்சை மாங்காய் சாப்பிடுவதால் இத்தனை நோ...
அந்த விடயத்தை தவிர மற்ற எல்லாத்திலும் ...
11 மா இலை எடுத்து வீட்டு வாசலில் இப்பட...
பிரபல நடிகையின் மரணம் தான் மரணமா ..!? ...
பூனையை அபச குணம் என்று விரட்டியவர்கள் ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 374
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  754
  Shares