நடிகை ஸ்ருதி குண்டர்சட்டத்தில் அதிரடி கைது …! காரணம் இதுவா ..? 👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 382
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  762
  Shares

திருமணம்செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய நடிகைஸ்ருதி குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளார்.
ஆடி போனால் ஆவணி என்ற படத்தில் புதுமுக நடிகையாகநடித்தவர் ஸ்ருதி. கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த இவர் வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர்களை குறிவைத்து பண மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது.
இதனிடையே மென்பொறியாளர் சந்தோஷ்குமாரை திருமணம்செய்வதாக கூறி ரூ.43 லட்சம் மோசடி செய்த வழக்கில் நடிகை ஸ்ருதி கைது செய்யப்பட்டார்.
மேலும், திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.41 லட்சம்மோசடி செய்ததாக சேலத்தைச் சேர்ந்தபாலமுருகன் என்பவர் கொடுத்த புகாரின் பெரில்நடிகை ஸ்ருதி மீதுவழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புகாரின்பேரில் வழக்குப்பதிந்த பொலிசார் ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, தம்பி சுபாஷ், வளர்ப்பு தந்தை பிரசன்னவெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
திருமணம்செய்வதாக ஆசை காட்டி ஸ்ருதி மோசடியாக பெற்ற பணத்தில் 15.50 லட்சத்திற்கு 62 பவுன் நகை, டைமண்ட் ரூபி பதித்த தங்க நகைகள் வாங்கியுள்ளார்.
மேலும் மியூச்சுவல் பண்டில் 5.50 லட்சம்முதலீடு, 1.32 லட்சம் விமான செலவு, ஓட்டல் செலவு போன்றவற்றுக்கு செலவழித்துள்ளார். ஸ்ருதி பலரிடமும் இதேபோல், மோசடி செய்துள்ளதும், பணத்தை திருப்பி கேட்கும் பலரையும் மனித உரிமை ஆணையத்தில்புகார் செய்வதாக மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தநடிகை ஸ்ருதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவரது தாய் சித்ரா, தந்தை பிரசன்ன வெங்கடேஷ் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 382
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  762
  Shares